இந்த பெருந்தொற்று பல குடும்பங்களை தொலைவில் தள்ளியுள்ளது என்றால் அது சற்றும் மிகையல்ல. குறித்த நேரத்தில் தாயகம் செல்லமுடியாமல் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பிறந்து வாடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது இந்த தொற்று. இந்நிலையில் மலேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சிங்கப்பூரில் 578 நாட்கள் (ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக) கழித்த பிறகு, தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்காக இறுதியாக வீடு திரும்பியுள்ளார். அவர் வீடு திரும்பியபோது நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவத்தை அவரது கணவர் Video எடுத்துகடந்த ஜனவரி 10ம் தேதி தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
அந்த ஆணின் மனைவி கடந்த ஜூன் 10, 2020 முதல் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக வெளியூரில் இருந்ததாகவும். இதனிடையே சிங்கப்பூர்-மலேசியா வழியாக மலேசியாவுக்கு மீண்டும் எல்லையைத் தாண்டிய VTL பயணம் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் தனது மனைவியை அழைத்துச் செல்லச் சென்றதாகவும் அந்த காணொளியில் கூறியுள்ளார். தனது மனைவியை வரவேற்க பூங்கொத்துக்களை அளித்த அவர், வீடு திரும்பியதும் தனது மனைவி வீட்டின் வாசலில் நிற்பது அறியாதவர் போல உள்ளே செல்கின்றார். அவர்களுது இரு குட்டி மகள்களும் தாயின் வருகை குறித்து அறியாதவாறு அவர் நடந்துகொள்கிறார்.
அந்த குடும்பத்தின் அழகான நெகிழ்ச்சியான சந்திப்பை காண..
அப்போது இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த தாய் உள்ளே வர, அவர்களது இளைய மகள் முதலில் தனது தாயை அடையாளம் கண்டுகொள்கிறார். அந்த தாய் கடந்த 2020 ஆண்டு வீட்டை விட்டு வேளைக்கு வெளியூர் சென்றபோது அந்த கடைக்குட்டிக்கு ஒரு வயது கூட நிரம்பவில்லை என்று அந்த காணொளியில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களுடைய பெரிய மகள் அம்மாவை பார்த்தவாறு எவ்வித சமிக்கையும் செய்யாமல் இருக்க இறுதியில் தாயிடம் சென்று அவரை கட்டியணைத்துக்கொள்கிறார். இந்த நிகழ்வு அனைத்தையும் ஒரு அறையின் ஓரத்தில் நின்று கவனித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணின் தாய் அவரை ஆரத்தழுவி அழுக துவங்கினர். அதன் பிறகு அந்த பெண்ணின் அக்காவும் கண்ணீர் மல்க அவரை வரவேற்றார். குடும்பங்களை பிரிந்து வாடும் அனைவரையும் இந்த நிகழ்வு கண்கலங்க வைத்துள்ளது
மலேசியாவின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 3,00,000 மலேசியர்கள் வேலைக்காக ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் இடையே நில எல்லையில் தங்கியுள்ளனர். கோவிட்-19 தொற்றுநோய்களின் போது எல்லை மூடப்பட்டதன் காரணமாக டிசம்பர் 2021 நிலவரப்படி சுமார் 1,41,000 மலேசியர்கள் சிங்கப்பூரில் சிக்கியுள்ளனர் கூறப்படுகிறது.