TamilSaaga

“சிங்கப்பூரில் MOM பெயரில் வரும் போலி அழைப்பு” : அதை நீங்கள் எப்படி கண்டுபிடிக்கலாம்? – MOM அளித்த விளக்கம்

சிங்கப்பூரில் +994 என்று தொடங்கும் எண்ணிலிருந்து மோசடி அழைப்புகள் வருவதாக நாங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளோம் என்று மனிதவள அமைச்சகம் வெளியிட்ட முகநூல் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்த அழைப்பில் மோசடியாளர்கள் மக்களுடைய சொந்த தகவல்களை கேட்டறிந்து மோசடி செய்கின்றனர் என்று மனிதவள அமைச்சகம் எச்சரித்துள்ளது. இந்த போலி கணக்கின் Profile புகைப்படம் மனிதவள அமைச்கத்தின் லோகோவின் படத்தைக் கொண்டுள்ளது என்றும். மேலும் நமது MOM வெளிநாட்டிலிருந்து அழைப்புகளைச் செய்யவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு நாங்கள் அறிவுறுத்த விரும்புகிறோம். நீங்கள் அத்தகைய அழைப்பைப் பெற்றால், அதைப் புறக்கணித்து, அழைப்பாளருக்கு எந்த தகவலையும் வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்”.

மேலும் இந்த அழைப்பால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், தயவுசெய்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும். என்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது போலி அழைப்பா என்பதை உறுதி செய்ய சில வழிகளை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவை பிணவருமாறு…

நமது சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ MOM வலைத்தளம் https://www.mom.gov.sg இதுதான். எங்களிடம் MOM தொடர்பான தகவல்களையும் eServices-களையும் பாதுகாப்பாகவும் செய்ய உதவுகிறோம். மேலும் இந்த லிங்க்-ஐ பயன்படுத்தி அது போலி அழைப்பா என்பதை நீங்கள் உறுதி செய்யலாம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts