சிங்கப்பூரில், ART பரிசோதனை மூலம் சோதித்து தொற்று உறுதியானவர்கள் உடல்நலம் நன்றாக உள்ள நிலையில் வீட்டில் இருந்தே பணி செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அவர்களின் வேலை அவர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கவில்லை என்றால், முதலாளிகள் அவர்கள் அலுவலகத்தில் இல்லாத அந்த காலத்தை ஊதியத்துடன் கூடிய நோய்வாய்ப்பட்ட விடுப்பாக கருத வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 25) வெளியிட்ட ஒரு ஆலோசனையில் கூறியது.
ART மூலம் நேர்மறை சோதனை செய்து ஆனால் உடல் ரீதியாக நன்றாக இருக்கும் ஊழியர்கள் 72 மணி நேரம் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள், பின்னர் மற்றொரு ART சோதனையை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். அப்போது அவர்களுக்கு நெகடிவ் வந்தால் அவர்கள் அலுவலகம் திரும்பலாம். ஆனால் அப்போதும் அவர்கள் நேர்மறையாக சோதனை செய்தால், அவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் எதிர்மறையான முடிவைப் பெறும் வரை ஒவ்வொரு 24 மணிநேரமும் மற்றொரு ART சோதனையை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்படக்கூடிய அல்லது அதிக ஆபத்துள்ள நிலையில் இருந்தாலன்றி, அறிகுறிகள் இல்லாவிட்டால், பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (PCR) பரிசோதனை செய்ய மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் MOM வெளியிட்ட அறிக்கையில் “அத்தகைய நபர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கண்காணிக்க சுய தனிமைப்படுத்துதலுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள், மேலும் சில நபர்கள் ART – பாசிட்டிவாக இருந்தால் PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் – அவர்கள் உடல் நலமாக இருந்தாலும் அவர்கள் அவ்வாறு செய்யவேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை ஈடுசெய்ய போதுமான ஊதியமில்லாத விடுப்பு இல்லாவிட்டால், முதலாளிகள் தங்கள் ஊழியர்களின் தேவைகளுக்கு ஆதரவாக இரக்கத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் பயன்படுத்த வேண்டும் என்று MOM கூறியுள்ளது.