TamilSaaga

சிங்கப்பூரில் வேலைக்கு சேர பணம் கேட்கும் “முதலாளிகள்”.. வெளிநாட்டு ஊழியர்களின் இயலாமையை காசாக்கும் அவலம்! – “Kickback” குறித்து MOM அதிரடி அறிவிப்பு

சிங்கப்பூரில் kickback குற்றங்களில் தொடர்புடைடைய சுமார் 2,400 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லது அதில் பாதி பேர் தொடர்ந்து சிங்கப்பூரில் பணிபுரிவதாகவும், சிலர் தாயகம் திரும்பிவிட்டதாகவும் MOM இன்று கூறியுள்ளது. 2016 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலங்களில் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் மனிதவள மூத்த அமைச்சர் கோ போ கூன் நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச்.1) பேசுகையில், இந்த 2400 நபர்களில் 20 சதவீதம் பேர் புதிய வேலைவாய்ப்பைக் கண்டறிந்து சென்றுவிட்டதாகவும், 30 சதவீதம் பேர் kickback பிரச்னைகள் தீர்க்கப்பட்ட பிறகும் தங்கள் முதலாளிகளுக்காக தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அது என்ன kickback பிரச்சனை?

சிங்கப்பூரில் உள்ள சில முதலாளிகள், வேலைக்கு ஆட்களை எடுக்க சட்டவிரோதமாக பணம் பெற்றுக் கொள்வதைத் தான் கிக்பேக் (kickback) எனப்படுகிறது.

மேலும் படிக்க – சிங்கப்பூர் Changi விமான நிலையத்தில் பணிபுரிந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு – 2900 சிங்கப்பூர் டாலர் வரை சம்பளம் – உடனே Apply செய்யலாம்

சுகாதாரத் துறையின் மூத்த அமைச்சராகவும் இருக்கும் Dr Koh, “கிக்பேக் எனப்படும் இந்த சம்பவங்களில் சட்டவிரோத தொகையாக $1,000 முதல் $3,000 வரை முதலாளிகள் பெறுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் இருந்து முதலாளிகள் கிக்பேக் வசூலிப்பது தொடர்பாக திரு லூயிஸ் Ng (Nee Soon GRC) நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பிய மூன்று கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்தார்.

மேலும், 2016 மற்றும் 2020 க்கு இடையில், MOM ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 102 முதலாளிகள் தவறான வழியில் இதுபோன்று கிக்பேக் வசூலித்ததற்காக அமலாக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.

சராசரியாக, ஒரு முதலாளிக்கு சுமார் ஐந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் ‘இன்டர்நெட் காதல் மோசடி’.. மாறி மாறி “ஏமாந்த” பெண்கள் – சிக்கிய “Shaahi” உணவகத்தின் இயக்குநர்

கிக்பேக் செலுத்துமாறுமுதலாளிகள் கேட்டால், வெளிநாட்டு தொழிலாளர்கள் உதவிக்கு உடனடியாக MOM ஐ அணுக வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

கிக்பேக் வசூலித்ததற்காக குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதலாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது $30,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts