TamilSaaga

“சிங்கப்பூரில் லாரியில் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” : விபத்தில் தொழிலாளர் மீது எரிய லாரி

சிங்கப்பூரில் மத்திய வணிக மாவட்டத்தில் கிராஸ் ஸ்ட்ரீட் மற்றும் சிசில் ஸ்ட்ரீட் சந்திப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 5) மாலை 5:44 மணியளவில் ஒரு லாரி மற்றும் காருக்கு இடையே விபத்து ஏற்பட்டது. 28 முதல் 34 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள், மற்றும் 58 வயதான காரின் ஓட்டுநர் மற்றும் அவரது காரில் இருந்து 60 வயது பயணி ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு சாட்சியின் கூற்றுப்படி, அந்த கார் இடதுபக்க லேனில் தூரத்தில் இருந்தது என்றும். அந்த லாரி அடுத்த லேனில் இருந்ததாகவும் கூறினார். இந்நிலையில் அந்த கார் இடதுபுறம் திரும்புவதற்குப் பதிலாக நேராகச் சென்ற பிறகு, லாரி மீது மோதல் ஏற்பட்டது. விபத்தை நேரில் பார்த்த 55 வயதான உணவு விநியோக நபர் ஒருவர் ஷின்மின் டெய்லி நியூஸிடம், “அவர் பலத்த சத்தம் ஒன்றை கேட்டதாகவும், மோதலின் தாக்கத்தால் இரண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் லாரியின் பின்புறத்திலிருந்து பறந்து வந்து விழுந்ததாகவும் கூறினார்.

இந்த நிகழ்விற்கு பின்னர் லாரி டிரைவர் மிகவும் பயந்துபோனார் என்றும், அவர் உடனடியாக வாகனத்தை பின்புறமாக செலுத்தினர் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் மீது பின்புற சக்கரம் எறியுள்ளது. டிரைவர் மீண்டும் முன்னோக்கி சென்ற நிலையில் பின்புற சக்கரம் அந்த தொழிலாளியின் மீது மீண்டும் எறியுள்ளது.

காயமடைந்த புலம்பெயர்ந்த தொழிலாளருக்கு உதவ அந்த சாட்சி முன்னால் ஓடியுள்ளார். மற்ற தொழிலாளி சுயநினைவை இழக்கும் தருவாயில் இருந்ததாகவும், தலையில் இருந்து லேசாக ரத்தம் வருவதாகவும் அவர் கூறினார். சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை லாரிகளில் ஏற்றிச் செல்வது மிகவும் விவாதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts