இந்த டிஜிட்டல் உலகத்தில் நாம் அன்றாடம் உண்ணும் உணவைப் போல மாறிவிட்டது நம் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன். அதே நேரத்தில் நாம் ஸ்மார்ட்போனில் பயன்படுத்துகின்ற செயலிகளும் இந்த உலகையே நமது கைக்குள் அடங்க வைக்க முயற்சிக்கிறது. இந்நிலையில் உலக அளவில் புகழ்பெற்ற முன்னணி நிறுவனமான ஃபேஸ்புக் தற்பொழுது தன்னுடைய பெயரை மாற்றியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஃபேஸ்புக் மற்றும் அதனை சார்ந்த whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் உலக அளவில் முடங்கியது நாம் அனைவரும் அறிந்ததே. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் பெயரை மாற்ற அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் முடிவு செய்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இணைப்பு மாநாடு நேற்று நடைபெற்றது இந்த வருடாந்திர இணைப்பு மாநாட்டில் பேசிய மார்க் தனது பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை Metta என்று மாற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
என் வாழ்நாளில் இந்த நிறுவனத்தை தொடங்கியதிலிருந்து சமூகம் சார்ந்த நிறைய பிரச்சினைகளுடன் போராடி நிறைவும் நானும் எனது சகாக்களும் கற்றுக்கொண்டோம். ஆகவே கற்றுக்கொண்ட அனைத்திலும் இருந்தும் ஒரு புதிய அத்தியாத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் ஃபேஸ்புக் என்ற சமூக வலைதளத்தின் பெயரில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகிய மூன்று தளங்களின் தாய் நிறுவனத்தின் பெயர் மட்டுமே மெட்டா என்று மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.