TamilSaaga

‘சிங்கப்பூரில் தொடரும் இக்கட்டான சூழல்’ – மனநலம் பாதுகாக்க சில “முக்கிய” தொலைபேசி எண்கள்

சிங்கப்பூரில் இந்த பெருந்தொற்று காலத்தில் மக்கள் பலரும் உணவு, இருப்பிடம் என்பதைத் தாண்டி மிகப் பெரிய மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று பலரும் பல வகையான மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களின் மன நலத்தை காக்கவும் அவர்களை பாதுகாக்கவும் சிங்கப்பூர் அரசும் பல தன்னார்வ நிறுவனங்களும் தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர. இந்நிலையில் இந்த கிருமி பரவல் சூழலில் சிங்கப்பூரில் செயல்படும் சில அரசு மற்றும் தன்னார்வல நிறுவனங்களை எப்படி தொடர்புகொள்ளலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

Fei Yue’s ஆன்லைன் கவுன்சிலிங் சர்வீஸ் நிறுவனத்தை eC2.sg என்ற இணையம் மூலம் தொடர்புகொள்ளலாம்.

Institute of Mental Health – 24 மணிநேரமும் செயல்படும் இந்த நிறுவனத்தை அணுக 6389 2222 என்று எண்ணிற்கு எப்போது வேண்டுமாலும் அழைக்கலாம்.

Samaritans of Singapore – 24 மணிநேரமும் செயல்படும் இந்த தொண்டு நிறுவனத்தை தொடர்புகொள்ள – 1800 221 4444 என்ற எண்ணிற்க்கு அழைக்கலாம்.

Singapore Association of Mental Health : என்ற இந்த நிறுவனத்தை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 1800 283 7019 மற்றும் 8511 2678 என்ற எண்களில் அழைக்கலாம்.

TOUCHline (Counseling) என்ற இந்த நிறுவனத்தை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 1800 377 2252 என்ற எண்ணில் அழைக்கலாம்.

Silver Ribbon Singapore என்ற இந்த நிறுவனத்தை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 6385 3714 / 6386 1928 / 6509 0271 என்ற எண்களில் அழைக்கலாம்.

Tinkle Friend for Children – என்ற இந்த நிறுவனத்தை திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை 1800 274 4788 என்ற எண்ணில் அழைக்கலாம்.

மேற்குறிப்பிட்ட இந்த தகவல்களை பிரபல mothership செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Related posts