TamilSaaga

“சிங்கப்பூரில் உள்ள பணிப்பெண்களுக்கான ஏஜென்சிகள்” : புதிய உரிம நிபந்தனைகளை அறிவித்த MOM

சிங்கப்பூரில் MDW (Migrant Domestic Workers) எனப்படும் புலம்பெயர்ந்த வீட்டு பணியாளர்களுக்கு என்று தனி வேலை வாய்ப்பு சோதனை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பணிப்பெண்களை சிங்கப்பூரில் அமர்த்தும் ஏஜென்சிகள், வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது முதலாளிகள் வீட்டில் பணிக்கு சேர்ந்த மூன்று மாதங்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு வேலை வாய்ப்பு சோதனையை நடத்த வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான புதிய உரிம நிபந்தனைகளின் கீழ் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று MOM தெரிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 28) அன்று வெளியான ஊடக வெளியீட்டில் மனிதவள அமைச்சகம் (MOM) ஒரு தொலைபேசி அழைப்பு அல்லது நேரடி Check-In மூலம் இந்த சோதனையை செய்யலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. “வரும் டிசம்பர் 1, 2021க்குப் பிறகு வீடுகளில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அனைத்து புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கும் (MDWs) இது பொருந்தும்.” என்பது நினைவுகூரத்தக்கது.

புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களை சிறந்த முறையில் ஆதரிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, MOM, இந்த ஆண்டு இறுதிக்குள் வேலை வாய்ப்பு முகமைகளின் பிந்தைய வேலை வாய்ப்புச் சோதனைகள் செயல்படுத்தப்படும் என்று முன்பு அறிவித்தது நினைவுகூரத்தக்கது. பணிப்பெண்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையிலான உறவை எளிதாக்குவதில் வேலைவாய்ப்பு முகவர்கள் “முக்கிய பங்காற்றுகிறார்கள்” என்று MOM குறிப்பிட்டது.

எனவே வீட்டுப் பணியாளர்கள் நல்ல முறையில் குடியேறுகிறார்களா? என்பதை அவர்கள் சரிபார்க்க வேண்டியது அவசியம். MDW-க்கள் மற்றும் அவர்களது முதலாளிகளுடன் MDW வேலைக்கான விதிமுறைகள் மற்றும் தரநிலைகள் குறித்து தெளிவுபடுத்துவதில் வேலைவாய்ப்பு முகவர்களும் பங்கு வகிக்க முடியும்” என்று MOM கூறியது. 20220ம் ஆண்டின் இறுதியில் நடைமுறைக்கு வரும், “இழப்பீடு வழங்க முடியாத ஒரு மாதத்திற்கு ஒரு ஓய்வு நாளை முதலாளிகள் பணிப்பெண்களுக்கு வழங்க வேண்டும்” என்று கடந்த ஜூலை மாதம் அமைச்சகம் கூறியதும் இந்நேரத்தில் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

அதேபோல பணிப்பெண்களுக்கு எதிராக நடக்கும் துஷ்பிரயோகத்தைக் கண்டறிய உதவும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பணிப்பெண்ணின் ஆறு மாத மருத்துவப் பரிசோதனையின் போது, ​​முதலாளிகள் இனி சோதனை இடத்தில் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

Related posts