TamilSaaga

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு பணிப்பெண்கள் – கட்டாய ஓய்வு நாள் கொள்கை விரைவில் அமல்

சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தும் நபர்கள், மாதத்திற்கு குறைந்தது ஒரு நாலாவது ஈடுசெய்ய முடியாத ஓய்வு வழங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 22) அன்று தெரிவித்துள்ளது.

பணிப்பெண்கள் மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்கான ஆதரவை வலுப்படுத்த உதவும் வகையில் அமைச்சகம் செயல்படுத்தும் பல நடவடிக்கைகளில் இந்த புதிய நடவடிக்கையும் ஒன்றாகும் என்று மனிதவள வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கட்டாய ஓய்வு நாள் கொள்கை வரும் 2022ம் ஆண்டின் இறுதியில் நடைமுறைக்கு வரும். சில முதலாளிகளுக்கு “புதிய ஓய்வு நாள் ஏற்பாடுகளை சரிசெய்ய” நேரம் தேவைப்படலாம் என்று புரிந்து இந்த கால அவகாசத்தை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பணிப்பெண்கள் விரைவில் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவார்கள் என்று மனிதவள அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts