சீனாவில் தொடங்கிய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாலும், ஆன்லைனில் தனது பணத்தை சூதாட்டத்தில் இழந்ததாலும் விரக்தியடைந்த ஆடவர் ஒருவர் சிங்கப்பூரில் ஒரு பெண்ணை கொடூரமாக நடத்திய நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 25வயது மதிக்கத்தக்க Huang என்ற அந்த சீன நாட்டவர், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை இணைய வழியில் சந்தித்து நட்பாக பழகியுள்ளார். இதனைத்தொடர்ந்து Huang மற்றும் அந்த பெண் மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
தனது கடனை அடைப்பதற்காக தன்னை காண வரும் அந்த பெண்ணிடம் கொள்ளையடிக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தார் Huang என்று சீன நாளிதழான Zaobao தெரிவித்துள்ளது. இருவரும் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 20ம் தேதியன்று அந்த ஹோட்டல் அறையில் சந்தித்து உடலுறவும் கொண்டுள்ளனர். இறுதியாக அந்த பெண் குளியலறைக்கு சென்று நிர்வாணமாக திரும்பியபோது ஏற்கவே தயாராக இருந்த Huang கையில் இருந்த Tapeஐ கொண்டு அந்த பெண்ணின் கைகள் மற்றும் கால்களை கட்டினார்.
பிறகு பாதிக்கப்பட்டவரிடம் தனக்குப் பணம் தேவைப்படுவதாகவும், ஆகவே அந்த பெண்ணின் தொலைபேசியின் Passwordஐ கூறும்படி மிரட்டியுள்ளார். இறுதியில் வங்கிக் கணக்கை அணுக, பாதிக்கப்பட்டவரின் PIN எண் தனக்குத் தேவை என்பதை உணர்ந்த பிறகு, Huang PIN நம்பரை கொடுக்குமாறும் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். அதற்கு ஆரம்பத்தில் அந்த பெண் மறுத்தாலும் இறுதியில் அந்த நபரின் மிரட்டலால் தனது PIN எண்ணையும் கொடுத்துள்ளார்.
இரவு முழுவதும், பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது வங்கிக் கணக்கிலிருந்து அந்த நபரின் வற்புறுத்தலுக்கு இணங்க பல Third Party வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பியுள்ளார். மீண்டும் மறுநாள் காலை அந்த பெண்ணை எழுப்பி தனது கிரெடிட் கார்டுக்கும் பணம் அனுப்பு என்று கூறி தொடர்ச்சியாக அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இறுதியில் சுமார் 3,41,000 yuanகளை (72,800 சிங்கப்பூர் டாலர்) அந்த பெண்ணிடம் இருந்து மிரட்டி பறித்துள்ளார் அந்த கொடூரன்.
சுமார் 12 மணிநேரம் நிர்வாணமாக அந்த பெண்ணை சிறைபிடித்து நிலையில், இறுதியாக அவரை அங்கிருந்து செல்ல அனுமதித்துள்ளார். வெளியில் சென்று யாரிடமாவது கூறினால் உனது நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். ஆனால் துணித்து செயல்பட்ட அந்த பெண் போலீசாரிடம் புகார் அளிக்க CCTV கேமரா உதவியுடன் அந்த நபரை சிங்கப்பூர் போலீஸ் கைது செய்தனர்.
கடந்த ஓராண்டாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று மார்ச் 28ம் தேதி அந்த நபருக்கு 3 வருடம் சிறை மற்றும் 12 பிரம்படிகள் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.