சிங்கப்பூரில் ஏராளமான Casino-க்கள் அதாவது சூதாட்ட விடுதிகள் உள்ளன. அங்கு அதிகாரப்பூர்வமாக அரசாங்கத்தின் உதவியோடு ஐயாவை நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு தினம் தினம் ஆயிரக்கணக்கான மற்றும் லட்சக்கணக்கான பணம் வெற்றி தோல்வியால் இடம் மாறும்.
கடந்த வாரம் மெரினா பே-வில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் வழக்கம் போல் ஏராளமானவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பலர் முனைப்புடன் வெற்றிபெறக் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது திடீரென ஒரு நபர் சரிந்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சுதாரித்து மருத்துவ உதவியை வரவழைத்தனர். மருத்துவர்களும் வந்து அவருக்கு அவசர சிகிச்சை வழங்கினர். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த நபர் உயிரிழந்துவிட்டார்.
உயிரிழந்த நபருக்கு Cardiac Arrest ஏற்பட்டு இதயம் செயலிழந்து போனது. இந்த சம்பவம் நடக்கும் சில நிமிடங்களுக்கு முன் தான் அந்த நபர் Casino-வில் 4 மில்லியன் டாலர் பணத்தை வென்றுள்ளார். அதற்கான கொண்டாட்டமாக களித்திருந்த சிறிது நேரத்திலேயே இந்த சோகமான நிகழ்வு நடந்துள்ளது.
அவரின் அடையாளங்கள் தெரியாத நிலையில் இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மனிதனுக்கு மரணம் என்பது எப்பொழுது நேரும் என்பது யாராலும் அறிய முடியாது. வாழ்க்கை எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதற்கு இது ஒரு பெரிய எடுத்துக்காட்டாகும்.
சில நிமிடங்களில் அந்த 4 மில்லியன் பணம் அவரது வாழ்க்கையே மாற்றக் காத்திருந்தது. ஆனால் ஆண்டவன் இட்ட கட்டளை போல் ஆளே இல்லாமல் ஆகி விட்டார். இது தான் வாழ்க்கை என்பதை உணர்ந்து இயன்றவரை இருக்கும் நொடிகளை இன்பமாய் வாழக் கற்றுக் கொள்வோம்!