TamilSaaga

மனதை ரணமாக்கிய 18 ஆண்டுகால வலி.. குழந்தையை கையில் ஏந்தியதும் கண்ணீர் விட்டு கதறிய தந்தை – நம்மை ஆனந்த கண்ணீரில் மூழ்கடிக்கும் வீடியோ

குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்.. என்பது அய்யன் திருவள்ளுவரின் வாக்கு. உண்மையில் இந்த நவ நாகரீக உலகில் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது ஒரு போராட்டமாகவே மாறிவிட்டது.

தற்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று சிறிது காலம் தள்ளிவைக்கும் தம்பதிகள் இதே உலகில் தான் குழந்தை வரம் வேண்டி கோவில்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் நடையாய் நடக்கின்றனர் பல்லாயிரம் தம்பதிகள்.

நாங்கள் உச்சிமுகர்ந்து பாதுகாத்து வளர்த்திட எங்களுக்கும் ஒரு குழந்தை பிறந்துவிடாதா என்றே ஏக்கம் தான் இன்றைய உலகில் ஆகப்பெரிய கொடுமை. அப்படி 18 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் வாடிவந்த ஒரு தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது.

சிங்கப்பூர் கடற்கரை சாலை சந்திப்பு.. கண்மூடித்தனமாக சட்டென்று திரும்பிய கார்.. முடித்தூக்கிய SMRT பேருந்து, “ஏன் இவ்வளவு அவசரம்” – வெளியான வீடியோ

இன்றைய தேதியில் இந்த வீடியோ தான் உலகெங்கிலும் ட்ரெண்டிங் என்றே கூறலாம், தனியார் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட அந்த காணொளியில் மருத்துவர் ஒருவர் பிறந்த குழந்தையை தகப்பனிடம் கொடுக்க.

18 ஆண்டுகள் கழித்து தனது குழந்தையை கையில் ஏந்திய அந்த மகிழ்ச்சியில் அந்த தகப்பன் கதறி அழுகின்ற காட்சி நம்மையும் சில நிமிடங்கள் ஆனந்த கண்ணீரில் நனைகிறது. கையில் குழந்தையோடு மண்டியிட்டு அழுகின்ற அந்த தகப்பன் மீது சுற்றியிருந்த சொந்தங்கள் இனிப்புகளை வீசி ஆர்ப்பரிப்பதையும் நம்மால் பார்க்கமுடிகிறது.

குழுமியிருந்த சொந்தங்கள், மருத்துவர்களின் கைகளை பிடித்து தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர். 18 ஆண்டுகால வலி தீரும்போது வந்த அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை என்று தான் கூறவேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts