சிங்கப்பூரில் கேமிங் நாற்காலிகள், கேமிங் கன்சோல்கள் மற்றும் எலக்ட்ரானிக் லைஃப்ஸ்டைல் பொருட்கள் விற்பனையில் தொடர்புடைய இ-காமர்ஸ் மோசடிகளில் தொடர்பு இருப்பதாக 25 வயது நபர் மீது சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்து வருகின்றது. கடந்த திங்கள்கிழமை இரவு (அக்டோபர் 18), பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பணம் கொடுத்ததும் பொருட்களை பெறாதது குறித்த சில புகார்கள் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இ-காமர்ஸ் தளமான “Carousell-வில்” தள்ளுபடி விலையில் வழங்கப்படும் பொருட்களுக்கு வங்கி பரிமாற்றங்கள் மற்றும் PayNow மூலம் ஆன்லைன் விற்பனையாளருக்கு பணம் செலுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். இதனையடுத்து விசாரணையை முடுக்கிவிட்ட போலீசார் Carousellவின் நெருக்கமாக ஒத்துழைப்பதன் மூலம், வணிக விவகாரத் துறையின் அதிகாரிகள் 25 வயதான நபரை அடையாளம் கண்டு அவரை கைது செய்தனர். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அவர் சுமார் 4,00,000 டாலருக்கும் அதிகமான தொகையை 500-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களை மோசடி செய்து பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.
குற்றம் நிரூபணம் ஆகின்ற பட்சத்தில் அந்த நபருக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். திங்களன்று, ஆன்லைன் வாங்குதல்களைச் செய்யும்போது வாங்குபவர்கள் முன்னெச்சிரிக்கையாக இருக்க காவல்துறை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றது. மேலும் பொருட்கள் அந்தந்த நபரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகே பணத்தை செலுத்தும் வகையில் அமைப்பு இருக்க வேண்டுமென்று காவல்துறை கூறியுள்ளது.
இது போன்ற மோசடிகள் குறித்து தகவல் தெரிந்த எவரும் 1800-255-0000 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் அல்லது இந்த இணையதளத்தில் ஆன்லைனில் மூலம் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.
மோசடிகள் குறித்த கூடுதல் தகவலுக்கு, இந்த வலைத்தளத்திற்குச் செல்லவும்\ அல்லது 1800-722-6688 என்ற ஊழல் எதிர்ப்பு ஹாட்லைனை அழைக்கவும்.