TamilSaaga

சிங்கப்பூர் வரும் பணிப்பெண்களுக்கு ஒரு “நற்செய்தி” : ICA அளித்த சலுகை – ஆனால் “அவர்களுக்கு” இல்லை

சில நாடுகளில் இருந்து தற்போது சிங்கப்பூருக்குள் நாளை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 26) இரவு 11.59 மணிக்குப் பிறகு திரும்பும் பணிப்பெண்கள், தங்களுடைய வீட்டில் தங்கியிருப்பதற்கான அறிவிப்பை தங்கள் முதலாளியின் இல்லத்தில் செலவிட அனுமதிக்கப்படுவார்கள் என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தற்போது வெளியிட்ட அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ICAவின் வலைத்தள அறிக்கையின்படி, வகை II நாடுகளில் இருந்து திரும்பும் பணிப்பெண்கள் தங்கள் முதலாளியின் வீட்டில் ஏழு நாட்கள் SHN எனப்படும் தங்கியிருப்பதற்கான அறிவிப்பை வழங்க அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் வகை III நாடுகளில் இருந்து திரும்பி வருபவர்களும் தங்கள் 10 நாள் வீட்டில் தங்குவதற்கான அறிவிப்புக்காக இதைச் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ICA தெரிவித்துள்ளது. இந்த ஏற்பாடு சிங்கப்பூரை விட்டுச் செல்வதற்கு முன்பு ஏற்கனவே தங்கள் முதலாளிகளிடம் வேலை செய்து கொண்டிருந்த பணிப்பெண்களுக்கு மட்டுமே என்று பொருந்தும் என்றும் ICA திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் வரையறைப்படி வகை II மற்றும் III-ன் கீழ் உள்ள நாடுகளில் இருந்து திரும்பும் பணிப்பெண்களும் தங்களுடைய வீட்டில் தங்குவதற்கான அறிவிப்பின் கடைசி நாளில் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

வகை II நாடுகளில் ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் சவுதி அரேபியா ஆகியவை அடங்கும். பிரிவு III-ன் கீழ் உள்ள நாடுகளில் கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அடங்கும் என்பது நினைவுகூரத்தக்கது. ICAவின் கூற்றுப்படி, “Confinement Nanny” என்று அழைக்கப்படும் கர்பிணி பெண்களை கவனித்துக்கொள்ளும் பணிப்பெண்கள் தங்களுடைய தங்குமிட அறிவிப்புகளை தங்கள் முதலாளியின் இல்லத்தில் கழிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் முதலாளியின் இல்லத்தில் தங்கியிருப்பதற்கான அறிவிப்பை வழங்கும் பணிப்பெண்கள், வீட்டில் தடுப்பூசி போடப்படாத பாதிக்கப்படக்கூடிய நபர்கள் இருந்தால், தங்களை ஒரு தனி அறையில் தனிமைப்படுத்திக் கொள்ள “வலுவாக ஊக்குவிக்கப்படுகிறார்கள்”.

Related posts