சிங்கப்பூரில் காதல் விவகாரத்தில் மோசடி செய்ததன் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 23 வயது நபர் கடந்த திங்கள்கிழமை (அக்டோபர் 4) கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரியில், காதல் மோசடியால் பாதிக்கப்பட்டதாகக் கூறி ஒரு பெண்ணிடமிருந்து காவல்துறைக்கு புகார் ஒன்று வந்துள்ளது. சிங்கப்பூர் வரத் திட்டமிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் என்று கூறி ஆன்லைனில் ஒரு மனிதனுடன் நட்பு கொண்டிருந்ததாக அந்தப் பெண் புகாரில் கூறினார்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தன்னை மருத்துவர் என்று குறிக்கொண்டு அந்த, ஒரு நாள் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு பரிசும் தனது சில உடமைகளையும் அனுப்புவதாக கூறியுள்ளார். இந்நிலையில் அந்த பார்சல் வருவதற்காக அவர் காத்திருந்த நிலையில், அந்தப் பெண்க்கு தெரியாத நபர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகளைப் பெறத் தொடங்கியுள்ளார்.
அந்த அழைப்பில் மலேசியாவில் பார்சல்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், பார்சல்களை விடுவிக்க பணம் தேவை என்றும் அவர்கள் அந்த பெண்ணிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணும் தனது கணக்கில் இருந்து 15,000 டாலரை அந்த ஆணின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
23 வயதான அந்த நபர், குற்றவியல் நடத்தையால் பயனடைந்ததாக இரண்டு வழக்குகளுடன் கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சட்டப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அரை மில்லியன் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இதுபோன்ற காதல் மோசடிகளில் ஈடுபட்டு வந்த ஒரு மோசடி கும்பல் பன்னாட்டு போலீஸ் ஒத்துழைப்பில் முறியடிக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு ஒரு காதல் மோசடி குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த மோசடி கும்பல் சிலாங்கூரை அடிப்படையாகக் கொண்டது மற்றும் சிங்கப்பூரில் இதுவரை ஏழு நபர்களை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இந்த மோசடி கும்பலின் வலையில் சிக்கி 37,000 வெள்ளியை இழந்துள்ளனர்.