சிங்கப்பூரில் பான் ஐலண்ட் எக்ஸ்பிரஸ்வே (PIE) வழியாக சென்ற லாரி மோதியதில் இரண்டு வெளிநாட்டு தொழிலாளர்கள் இறந்த சம்பவம் சிங்கப்பூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. லாரிகளின் பின்னால் ஆபத்தான முறையில் பயணிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலை குறித்து பல கேள்விகள் எழுந்தன. இந்த விபத்துக்குப் பிறகு, கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்த அடுத்தடுத்த மாதங்களில், லாரிகளின் பின்புறத்தில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
“சிங்கப்பூருக்கான பயண ஆலோசனை அமைப்பில் மாற்றம்” – அமெரிக்காவின் CDC நிறுவனம் அறிவிப்பு
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு தொழிலாளர்களின் பங்கு என்பது மிகவும் பெரியது என்றால் அது சற்றும் மிகையல்ல எனலாம். சிங்கப்பூர் அரசும் தங்களின் வளர்ச்சிக்காக பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகின்றது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் dormitoryகளில் இருந்து வேலையிடங்களுக்கு லாரிகளில் அழைத்துச்செல்லப்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூரில் கடந்த ஜனவரி 04ம் தேதி, தொழிலாளர்கள் நிறைந்த லாரி ஒன்று ஈரமான சாலையில் திரும்ப முயற்சிக்கும்போது நடுவழியில் சறுக்கி சென்ற காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செலிடார் வெஸ்ட் லிங்கிற்கு SLE வெளியேறும் பாதையின் பக்கவாட்டு சுவரில் மோதி அந்த வாகனம் நின்றது. அதிர்ஷ்டவசமாக லாரி வேகமாக செல்லவில்லை என்பதாலும், முன்னும் பின்னும் எந்தவித வாகனங்கள் வரவில்லை என்பதாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.