சிங்கப்பூரில் நீண்ட காலமாக பணிபுரிந்து வந்த வெளிநாட்டு ஊழியர், work permit Renewal குறித்து தனது முகநூல் பக்கத்தில் தவறான தகவல் வெளியிட்டுள்ளதாகவும், அது dormitory-யில் உள்ள மற்ற ஊழியர்களை தூண்டிவிடக் கூடிய வகையில் உள்ளதாக மனிதவளத்துறை அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த 19 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் ஜாகிர் ஹொசைன். இவர் தனது பணி அனுமதிச் சீட்டை Renewal செய்ய விண்ணப்பித்திருக்கிறார். ஆனால், சிங்கப்பூர் மனிதவளத்துறை அமைச்சகம் புதுப்பித்தலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இவரது work pass புதுப்பிக்க தகுதியற்றதாக Controller of Work Passes-ஆல் நிராகரிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் அவர் மேல்முறையீடு செய்தார். ஆனால், மீண்டும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தவிர, அவர் வேலைப்பார்த்த நிறுவனம் அவரது work pass renewal-க்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
முன்னதாக, ஜாகிர் ஹொசைன் சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களைப் பற்றி தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி எழுதியுள்ளார். அவர்களது உரிமைகள் குறித்தும் எழுதியிருக்கிறார். ஆனால், அவையெல்லாம் சற்று ஓவர் டோஸாக அமைந்தது தான் பிரச்சனை. குறிப்பாக, வெளிநாட்டு ஊழியர்களின் உரிமைக்காக தொடர்ந்து வாதாடி வந்துள்ளார்.
இதுகுறித்து மனிதவள அமைச்சகம் கூறுகையில், “அவர் வெளிநாட்டு ஊழியர்கள் பற்றி அடிக்கடி முகநூலில் எழுதியுள்ளார். Activism-ல் ஈடுபட்டார். இருந்தபோதிலும் நாங்கள் அவரது work pass-ஐ பலமுறை புதுப்பித்துள்ளோம். இருப்பினும், அவரது சில பதிவுகள் மற்றவர்களை தவறாக வழிநடத்தும் விதமாகவும், பொய்யான அல்லது வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் வகையில் இருக்கும் போது நாங்கள் இது போன்று வரைமுறையோடு நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு ஜாகிர் ஹொசைன் சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் ‘வேலை அடிமைகள்’ என்று முகநூலில் குறிப்பிட்டதாக MOM எடுத்துக்காட்டுடன் அவரது செயல்பாடுகளை விளக்கியுள்ளது.
இப்போது ஜாகிர் ஹொசைனின் பணி அனுமதி புதுப்பிக்க ‘தகுதியற்றது’ என்று MOM அறிவித்துவிட்டது. கடந்த 2003ம் ஆண்டு கட்டிடத் துறையில் பணியாற்ற சிங்கப்பூர் வந்த ஜாகீர், தனது செயல்பாடுகளால் தற்போது சிங்கையில் பணிபுரிய முடியாத நிலைக்கு சென்றுவிட்டார்.