சிங்கப்பூர் வேலைக்கு சென்று லகரத்தில் சம்பளம் வாங்க வேண்டும் என்பது தான் பலரின் ஆசையாக இருக்கிறது. இது சிலருக்கு நடந்தாலும் பலருக்கு இது பெரிய போராட்டமாகவே இருந்து வருகிறது. கஷ்டப்பட்டு பல மணி நேரம் உழைத்தால் தான் ஆயிரத்திலேயே சம்பளம் வரும் நிலை தான் தற்போது இருக்கிறது. மற்ற வொர்க் பாஸெல்லாம் எதுவும் ஏமாந்து விடவும் வாய்ப்பு இருக்கிறதால், பெரும்பாலான ஊழியர்கள் skill டெஸ்ட் முடித்து விட்டு சிங்கப்பூர் வருவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் Skill டெஸ்ட் அடிப்பது தற்போது பெரிய சிக்கலாகி இருக்கிறது. கோட்டா பிரச்னையால் அட்மிஷன் போட்டவர்களுக்கு இன்னமும் பயிற்சி கூட தொடங்காத நிலையில் தான் இருக்கின்றனர். மேலும், ஏற்கனவே நவம்பர் மாதத்தில் Skill டெஸ்ட் அடித்தவர்களுக்கு இன்னமும் ரிசல்ட் வராத நிலையில் இருக்கிறது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியரா நீங்க… Class 4 லைசன்ஸ் எப்படி எடுக்கலாம்? குழப்பமே வேணாம் இத படிங்க!
இதில் சிலர் மற்ற பெர்மிட்டில் வந்து சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பதையுமே வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இதற்கு 3 நாட்களுக்குள் தான் ஆகும் என்பதால் தமிழ்நாட்டில் அடிப்பதை விட ரொம்பவே சுலபம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். தமிழ்நாட்டில் அடிப்பதை விட செலவும் 80 ஆயிரத்திற்குள்ளாகவே அடங்கி விடும். ஆனால் எந்த இன்ஸ்ட்யூட்டில் அடிக்கலாம் என்ற குழப்பம் கூட இருக்கும். அப்படி உங்களுக்கு குழப்பம் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்.
தமிழ்நாட்டில் ஏகப்பட்ட டெஸ்ட் இன்ஸ்ட்டியூட்கள் இருந்தாலும் BCAவால் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்டியூட்கள் 2 மட்டும் தான் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இதுகுறித்து BCA இணையத்தளத்திலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் BCA அங்கீகரித்த இன்ஸ்ட்டியூட்கள் மொத்தமே நான்கு தான். இதில் 2 தமிழ்நாட்டிலும், ஒன்று வெஸ்ட் பெங்காலிலும், ஒன்று ஹைதராபாத்திலும் இடம்பெற்று இருக்கிறது.
இந்த இன்ஸ்ட்டியூட்களில் நீங்க அட்மிஷன் போடும்போது நேரடியாக கோட்டா கிடைக்கும் என்பதால் விரைவில் உங்களால் மெயின்டெஸ்ட் எழுதி விட முடியும்.
இதையும் படிங்க: சிங்கப்பூரின் பல பகுதிகள் இன்னும் சில வருடங்களில் கடலில் முழ்கலாம்? ஏன் இந்த ஆபத்து? இது தான் காரணமா?
இந்தியாவில் இடம் பெற்றுள்ள அந்த இன்ஸ்ட்டியூட்கள்:
- TAC Resources (India) Pte Ltd
No.1/7, சுபாஷ் சந்திர போஸ் நகர், வேதமங்கலம் கிராமம், செங்கல்பட்டு, சென்னை 600127,
2/171 பாண்டியன் சாலை, நீலாங்கரை, சென்னை 600115
இதன் சிங்கப்பூர் கிளை: Tiong Aik Construction Pte Ltd, No. 1 Jalan Berseh , #03-01, New World Centre, Singapore 209037
- Hytech Goodwill Training and Testing Centre
மேடவாக்கம், சென்னை, தமிழ்நாடு 600100.
இதன் சிங்கப்பூர் கிளை: Hytech Builders Pte Ltd Blk 165, Bukit Merah Central, #05-3685/7, Singapore 150165
- TTJ Test Centre
பதன்சேறு மந்தல், மேடக் மாவட்டம், தெலுங்கானா 502 307, இந்தியா
இதன் சிங்கப்பூர் கிளை: TTJ Design and Engineering Pte Ltd 57 Pioneer Rd, Singapore 628508 - HTTC Overseas Training and Testing Services Pvt Ltd
244, பாடு சாலை, BSF Camp எதிரில், கொல்கத்தா 700128
இதன் சிங்கப்பூர் கிளை: Hi-Tek Construction Pte Ltd 9 Tagore Lane, #04-25, 9@Tagore, Singapore 787472
மேற்குறிப்பிட்ட இந்த இன்ஸ்டியூட்கள் மட்டுமே bca தரப்பில் இருந்து குறிப்பிடப்பட்டு இருக்கும் அங்கீகாரமிக்க இன்ஸ்டியூட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மேலும் தெரிந்து கொள்ள, https://www1.bca.gov.sg/docs/default-source/docs-corp-buildsg/manpower/otc-contact-list.pdf இந்த லிங்கினை க்ளிக் செய்யலாம்.