TamilSaaga
marine shipyard

Marine Shipyard துறையில் NTS Permit-ல் அனுமதிக்கப்பட்ட பணிகளின் புதிய பட்டியல் – MOM வெளியீடு!

சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பொதுவாக Work Permit, Employment Pass (E-Pass), மற்றும் S Pass போன்ற வேலை அனுமதிச் சீட்டுகள் (Permits) வழங்கப்படுகின்றன.

ஆனால், செப்டம்பர் 1, 2023 முதல், ஒரு புதிய வகை வேலை அனுமதி நடைமுறைக்கு வந்துள்ளது. அதுதான் Non-Traditional Sources (NTS) Permit.

 

NTS Permit என்றால் என்ன?

இந்த NTS Permit என்பது சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய வகை வேலை அனுமதிச் சீட்டாகும். இது குறிப்பாக, தொழில்நுட்பத் துறைகளிலும், மேலும் சில குறிப்பிட்ட துறைகளிலும் சிறப்பான திறமைகள் கொண்ட வெளிநாட்டுப் பணியாளர்களுக்காகவே உருவாக்கப்பட்டதாகும்.

யார் தகுதியானவர்கள்? என்னென்ன வேலைகள்?

உற்பத்தி (Manufacturing) மற்றும் சேவைத் (Service) துறைகள்: NTS Permit மூலம், இந்த இரண்டு துறைகளின் கீழ் வரும் பல்வேறு தொழில்களில் பணியாளர்களை வேலைக்குச் சேர்க்க முடியும்.

ஹோட்டல் மற்றும் உணவகத் துறை: சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் வேலை செய்வதற்குத் தேவையான பணியாளர்களை இந்த NTS Permit-இன் கீழ் பணியமர்த்தலாம்.

தொழில்நுட்ப மற்றும் கட்டுமானப் பணிகள்: இது மட்டுமல்லாமல், சீட் மெட்டல் வேலைகள் (Sheet Metal Work), வெல்டிங் (Welding), மெட்டல் மோல்டிங் வேலைகள் (Metal Moulding Work), ஸ்ட்ரக்சுரல் மெட்டல் வேலைகள் (Structural Metal Work) போன்ற தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கும் இந்த NTS Permit-இன் கீழ் ஆட்களைத் தேர்வு செய்யலாம்.

சிங்கப்பூர் NTS Permit விதிகளில் மாற்றம்……..புதிய துறையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாய்ப்புகள்!

Marine Shipyard துறையில் Non-Traditional Source (NTS) பணியாளர்களுக்கான அனுமதிக்கப்பட்ட வேலைகளின் பட்டியல்:

1. Assistant Supervisor
2. Boiler & Pipe Insulator
3. Boilermaker
4. Crane & Hoist Operator
5. Lift & Escalator Installer
6. Electrical Fitter
7. Electrician
8. Electronics Fitter
9. Fork Lift Truck Operator
10. Plumber & Pipe Fitter
11. Helmsman
12. Labourer
13. Machinery Mechanic
14. Metal Shipwright
15. Metalworking Machine Setter-Operator
16. Marine Engine Fitter
17. Marine Trades Worker-Cum-Driver
18. Marine Shipyard Trailer-Truck Driver
19. Marine Shipyard Heavy Truck Driver
20. Marine Shipyard Lorry Driver
21. Rigger/ Cable Splicer
22. Steam Turbine/ Boiler/ Engine Operator
23. Structural Metal Preparer & Erector
24. Welder & Flame Cutter
25. Refrigeration & Air-Conditioning Equipment Insulator
26. Refrigeration & Air-Conditioning Plant Installer
27. Rope & Cable Splicer
28. Scaffolder
29. Sheet Metal Worker
30. Ship & Ship Tank Cleaner
31. Ship Carpenter
32. Ship Electrician
33. Ship Grinder
34. Joiner
35. Ship Plater
36. Ship Rigger
37. Spray Painter (Except Construction & Motor Vehicles)
38. Structural Steel & Ship Painter/ Blaster
39. Structural Steel Worker
40. Production And General Supervisor
41. Underwater Worker

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts