TamilSaaga

சிங்கப்பூரில் சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு…!

சிங்கப்பூரில் மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் பேனல்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பங்களாதேஷை சேர்ந்த ஊழியர் கூரையில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.36 வயது மதிக்கத்தக்க ஊழியர் பத்து மீட்டர் உயரத்திலிருந்து விழுந்ததன் காரணமாக படுகாயம் அடைந்து இறந்து விட்டதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் பொழுது சூரிய வெளிச்சம் நுழைவதற்கான ஜன்னலை பொருத்தும் பணியில் தொழிலாளி ஈடுபட்டிருந்தார் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் ஆனது துவாஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் இரண்டரை மணி அளவில் நிகழ்ந்ததாக வந்துள்ளது.

காயமடைந்த ஊழியர் உடனடியாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் இரண்டரை மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.எனினும் காயம் அதிகமாக ஏற்பட்டதன் காரணமாக அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கட்டுமான பணியை உடனடியாக நிறுத்துமாறு மனிதவள் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது .தொழிலாளர்கள் உயரமான இடத்தில் இருந்து வேலை செய்யும் பொழுது தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் விளக்கியுள்ளது .சம்பந்தப்பட்ட ஊழியரின் உடல் அவரது சொந்த நாட்டிற்கு கொண்டு செல்ல எல்லா முடிவும் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அது மட்டுமல்லாமல் இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு உதவி செய்யவும் நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரை வேலை இடத்தில் ஏற்பட்ட மரணங்களை எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts