விஞ்ஞானம் மற்றும் இயற்கை என்ற இரண்டையும் சரிசமாக கையாண்டு சிறந்த முறையில் முன்னேறி வரும் நாடுகளின் பட்டியலில் நிச்சயம் சிங்கப்பூருக்கும் இடமுண்டு. இதன் காரணமாகத் தான் பல நாடுகளை சேர்ந்த குடிமக்கள் சிங்கப்பூரில் வந்து வேலை செய்ய மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. சிங்கப்பூரை பொறுத்தவரை லட்சக்கணக்கில் வெளிநாட்டு ஊழியர்கள் இங்கு வந்து வேலைசெய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுஒருபுரம் இருக்க, இந்த கொரோனா பரவல் சூழலில் சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. இருப்பினும் கடந்த சில காலமாக சிங்கப்பூரில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் சிங்கப்பூரின் பொருளாதாரமும் உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு அளவும் சிறிய அளவில் மீண்டு வருகின்றது. இருப்பினும் அது இன்னும் பூரணமாக முழுமையடையவில்லை என்றால் அது மிகையல்ல.
மேலும் சிங்கப்பூரில் வெளிநாட்டவருக்கான வேலைவாய்ப்பு மீண்டும் தொடங்கும் நிலையில் ஏற்கனவே இங்கு வேலை செய்து வந்த பணியாளர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் சிங்கப்பூரில் புதிய வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலைவாய்ப்பு குறைவாக இருக்கும் இந்த Covid-19 சூழ்நிலையில், “சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு” என்ற பெயரில் சமூக வலைத்தளங்களிலும் வாட்ஸ்ஆப்பிலும் ஒரு வகையான கருப்பு ஆட்டுக் கூட்டம் வெளிநாட்டு ஊழியர்களை தேடி கண்டுபிடித்து கொண்டிருக்கின்றது.
இவ்வகையான போலி விளம்பரங்களை கண்டு தனது பாஸ்போர்ட்களையும் தனது முன்பணத்தையும் தந்து சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் எண்ணிலடங்கா ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள். நேரடியாக வேலை வாய்ப்புகளைத் தரும் கம்பெனிகளை மட்டும் நம்புவோம் நலம்பெறுவோம்.
Source : நந்தனா ஏர் டிராவல்ஸ், திருச்சி