சிங்கப்பூரில் இரண்டு முறை தனது வீட்டை விட்டு வெளியேற முடியாமல் ஒரு பெண் அடைத்துவைக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணின் காதலன் அடைத்துவைக்கப்பட்ட அந்த பெண்ணின் முகத்தில் எச்சிலை உமிழ்ந்துள்ளார். இந்த கஷ்டங்களை இனியும் நம்மால் அனுபவிக்க முடியாது என்று உணர்ந்த அந்த பெண் இறுதியாக கடந்த 2018ல் அந்த காதலுடனான தனது உறவை விட்டு வெளியேறி உள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5), அந்த பெண்ணை தவறாக பயன்படுத்திய அந்த ஆணுக்கு ஏழு வார சிறை மற்றும் 5,400 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு விசாரணைக்குப் பிறகு, மாவட்ட நீதிபதி சாரா டான் முன்பு 41 வயதான அந்த ஐரோப்பிய நபர் ஏழு முறை தாக்குதல்கள் மற்றும் இரண்டு வேறு குற்றங்களுக்காக தனது தண்டனையை பெற்றார். இருப்பினும் அவர் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்த நபரின் முன்னாள் காதலியின் அடையாளத்தை பாதுகாக்கும் உத்தரவு காரணமாக அவருடைய அடையாளத்தை வெளியிடமுடியவில்லை. அவர் கடந்த மே மற்றும் ஆகஸ்ட் 2018க்கு இடையில் இந்த குற்றங்களை செய்துள்ளார் என்று நீதிமன்றம் தெரிவித்தது. அவர்கள் சமர்ப்பித்ததில், துணை அரசு வழக்கறிஞர்கள் சின் ஜின்செங் மற்றும் மெலினா சூ வெளியிட்ட தகவலின்படி “சிறந்த பாடகி அடீல் ஒருமுறை கூறியது போல், சில நேரங்களில் அது காதலில் நீடிக்கும், ஆனால் சில நேரங்களில் அது வலிக்கிறது. இந்த வழக்கில் இது ஒரு துயர நிகழ்வாகும்.” என்றார்.
இந்த ஜோடி முதன்முதலில் 2017ல் சந்தித்தது மற்றும் அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு குடும்பமாக மாறியது என்று நீதிமன்றம் கூறியது. பிப்ரவரி 2018ல் அந்த பெண் அந்த நபருடன் இனைந்து வாழ சென்றுள்ளார். பின்னர் ஒரு ஸ்விங்கர்ஸ் பார்ட்டியுடன் தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பாக அந்த தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்ட பிறகு, மே 16, 2018 அன்று முதல் அந்த நபரின் துஷ்பிரயோகம் தொடங்கியுள்ளது.