வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை கொடுமைப்படுத்தி கொன்ற குடும்பம். பாடாய் படுத்திய இந்திய வம்சாவளி பெண்ணை ஜெயிலில் தள்ளி அதிரடி தீர்ப்பு வழங்கிய சிங்கப்பூர் நீதிமன்றம்.
சொந்த மண்ணில் பொருளாதார பிரச்னையால் கஷ்டப்படும் போது சில பெண்கள் துணிந்து எடுக்கும் முடிவு தான். வெளிநாட்டு சென்று வேலை செய்யலாம் என்பதே. படித்தவர்களுக்கு நிறுவனங்களில் வேலை கிடைத்தாலும் படிக்காத பெண்களுக்கு கிடைப்பதோ வீட்டு வேலை தான். அதில் சில குடும்பம் அவர்கள் வீட்டு பெண் போல ஆதரித்தாலும் சில செய்யும் கொடுமைகளை வார்த்தைகளில் கூட எழுத இயலாது.
இதே மாதிரி ஒரு நிலைக்கு தான் தள்ளப்பட்டார் மியான்மர் நாட்டினை சேர்ந்த் பியான்க் கை டான். சிங்கப்பூர் பிஷான் பகுதியில் இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தில் வீட்டு வேலைக்காக சென்றார்.
அந்த வீட்டில் காயத்ரி முருகையா மற்றும் கெவின் செல்வம் இருவரும் இருந்துள்ளனர். 2015ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த பியான்க் அடுத்த 14 மாதங்களில் தலையில் ஏற்பட்ட பெரிய அடியால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தரப்பில் வழக்கு பதியப்பட்டது.
அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பியான்க் சேர்ந்த முதல் நாளில் இருந்து கடுமையாக நடத்தப்பட்டு இருக்கிறார். அதில், பியான்க்கை அடிப்பது, உதைப்பது, முகத்தில் தண்ணீர் ஊற்றுவது, கழுத்தை நெரிப்பது, சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போடுவது என கொடுமையாக நடத்தி இருக்கிறார்.
இதை கண்ட காயத்ரியின் தாயார் ப்ரேமா நாராயணசாமியும் அந்த பெண்ணிடம் மோசமான முறையில் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறார். இதனால் 38 கிலோவில் இருந்து 24 கிலோ குறைந்து இருந்தவரை கடுமையாக தாக்கியதில் அவரின் தலையில் அடிப்பட்டு இறந்து இருக்கிறார் என அறியப்பட்டது.
இந்த குற்றங்களை காயத்ரி ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்திருக்கிறது. இவரின் கணவர் மற்றும் 64 வயதான தாயார் ப்ரேமா மீது இருக்கும் குற்றங்களை அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் அந்த வழக்குகள் இன்னும் விசாரணையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.