இயல்பாகவே இந்தியாவில் அரசியல்வாதிகள் குறித்த பல விஷயங்கள் கேலி பொருளாக இணையத்தில் வலம் வருவது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் டெல்லியை நோக்கி பாட்னாவில் இருந்து சென்ற தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாட்னா நகரில் இருந்து டெல்லி நகரை நோக்கி சென்ற தேஜஸ் ராஜஸ்தானி எக்ஸ்பிரஸில், ஏசி பெட்டியில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் ஜட்டியுடன் வலம்வந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. கோபால் மண்டல் என்ற அந்த எம்.எல்.ஏ தனது ஆடைகளை களைந்து விட்டு பனியன் மட்டும் ஜட்டியுடன் அந்த ரயிலின் ஏசி பெட்டிகளுக்கிடையே அங்குமிங்கும் நடந்து சென்றதை பார்த்த பல பயணிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் ஒரு ரயில் சேவையில், மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு எம்.எல்.ஏ இவ்வாறு செயல்பட்டது பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்த காட்சியை கண்ட பயணிகள் சிலர் இதுகுறித்து எம்.எல்.ஏ-விடவும் அங்கு குழுமியிருந்த அவர்களுடைய ஆதரவாளர்கள் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் ரயில்வே பாதுகாப்பு படையிடம் புகார் அளித்த நிலையில், அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு சமாதானம் செய்து வைத்து நிலைமையை சீர் செய்துள்ளனர். மேலும் இந்த நிகழ்வு குறித்து பிரபல செய்தி நிறுவனமான ANIயிடம் பேசிய கோபால் மண்டல் எனக்கு வயிறு சரியில்லாத காரணத்தினாலேயே அவர் அவ்வாறு சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.