TamilSaaga

சிங்கப்பூரில் இந்திய ராணுவத் தளபதியின் “கெத்து” பயணம்.. அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய இந்தியா – சிங்கப்பூர் ” Friendship”

இந்தியாவின் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, இன்று காலை (ஏப்ரல் 5) பாதுகாப்பு அமைச்சகத்தில் (Mindef) சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் மற்றும் ராணுவத் தளபதி டேவிட் நியோவை சந்தித்தார்.

தங்கள் சந்திப்பின் போது, டாக்டர் எங் மற்றும் ஜெனரல் நரவனே ஆகிய இருவரும் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால இருதரப்பு பாதுகாப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தினர், மேலும் பிராந்திய புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தனர்” என்று Mindef கூறியுள்ளது.

சிங்கப்பூர் பயணத்தின் ஒரு பகுதியாக, ஜெனரல் நரவனே Pasir Laba முகாமில் உள்ள Infantry Gunnery மற்றும் Tactical Simulator-களை பார்வையிடுவார்.

மேலும் படிக்க – ALS நோயால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் பெண்.. 8 வருடங்கள் 24/7 போராடிய பெற்றோர்.. ‘நான் போகிறேன்’ என்று கண்ணீர் வழியே தகவல் சொல்லி உயிரை விட்ட மகள்

அவர் புதன்கிழமை சாங்கி கடற்படைத் தளத்தில் உள்ள சாங்கி பிராந்திய HADR (மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம்) ஒருங்கிணைப்பு மையம் மற்றும் தகவல் இணைவு மையத்தையும் பார்வையிடுகிறார்.

இறுதியாக, ஜெனரல் நரவனே, Goh Keng Swee Command and Staff கல்லூரியில் “India’s Strategic Perspective” என்ற தலைப்பில் உரை நிகழ்த்துவார் என்று Mindef மேலும் கூறியுள்ளது

Mindef அறிக்கையில், “ஜெனரல் நரவனேவின் வருகை சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் இதற்கு மேல் ஒரு வெளிநாட்டு ஊழியர் அசிங்கமும், வேதனையும் அனுபவித்திருக்க முடியாது.. 4 வயது மகன் முன்பு அரங்கேறிய கொடூரம்! – காட்டிக் கொடுத்த சிசிடிவி

சிங்கப்பூர் ராணுவமும் இந்திய ராணுவமும் இருதரப்பு பயிற்சிகள், தொழில்முறை பரிமாற்றங்கள் மூலம் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகின்றன.

இந்த பரஸ்பர நன்மை பயக்கும் தொடர்புகள் இருதரப்பு பாதுகாப்பு உறவை ஆழப்படுத்தியுள்ளன, பரஸ்பர புரிதலை மேம்படுத்தியுள்ளன மற்றும் இரு படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts