சிங்கப்பூர் அரசு விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டவர்களுக்கும் இது கண்டிப்பாக தெரிந்திருக்கும். குறிப்பாக சிங்கப்பூரில் சட்டவிரோதமாக வேலை செய்வது என்பது கடுமையான குற்றமாகும். சூழ்நிலையில் உணவு டெலிவரி டிரைவராக வேலை செய்த வெளிநாட்டைச் சேர்ந்த 4 பேர் முறையான அனுமதி இல்லாமல் வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் நால்வரும் புட்பாண்டா மற்றும் டெலிவரோ நிறுவனங்களில் டெலிவரி டிரைவராக வேலை புரிந்து வந்தனர். இதில் மலேசியா நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அமானுல்லா பைசால் என்பவரும் அடக்கம். இந்நிலையில் வெளிநாட்டு ஊழியர் வேலைச் சட்டத்தின் கீழ் இவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சிங்கப்பூரில் இவர்கள் வேலை செய்ய நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என மனிதவளவச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களை தவிர இவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்க துணையாக இருந்த சிங்கப்பூர் நாட்டவர் மற்றும் PR ஆகியோர் மீது குற்றத்திற்கு துணை புரிந்த காரணத்திற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.