என்னதான் தமிழ்நாட்டில் வாழும் நமது மக்கள் சம்பாதிப்பதற்காக சிங்கப்பூருக்கு சென்றாலும், மனிதநேயத்துடன் அவர்கள் செய்யும் சில செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு இன்னும் மனிதநேயம் இந்த உலகத்தில் இருக்கிறது என்பதை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அப்படி செய்யப்படும் செயலுக்கு உரிய அங்கீகாரமும் கொடுக்கப்படும் பொழுது, மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களின் மனதிற்கு அது ஊக்கப்படுத்தும் செயலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அப்படி ஒரு செயலை தான் சிங்கப்பூரின் Migrant’s Workers Center(MWC) செய்து தற்பொழுது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கடந்த ஜூலை 2023 சிங்கப்பூரில் தாய் மற்றும் மகனை ஏற்றிச்சென்ற SUV புக்கிட் திமா கால்வாயில் விழுந்தபோது, சிங்கப்பூரில் வாழும் சீனிவாசன் குடியரசு என்பவர் தயங்காமல், அசாதாரணமான துணிச்சலுடன், கால்வாயில் குதித்து, கார் விபத்தில் சிக்கிய இருவரையும் காப்பாற்றினார். தன் உயிரையும் பனையம் பனையம் வைத்து மற்றவர்களின் உயிரை காப்பாற்றிய சீனிவாசன் அவர்களின் நன்மனதை பாராட்டும் விதமாக கடந்த மாதம் நடைபெற்ற MWC ஸ்போர்ட்ஸ் கார்னிவலில் அவருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ்வாறு தன்னலம் பாராமல் பிறர் உயிரை காப்பாற்றும் சில நல்ல மனிதர்களால் என்னும் மனித நேயம் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று நம்மை நம்ப வைக்கின்றது. இவர்களுக்காக நாம் ஒன்றும் செய்யாவிட்டாலும் இவர்களின் நன்மனதை உலகறிய செய்வதே இவர்களுக்கு நாம் கொடுக்கும் அங்கீகாரம் ஆகும். இப்ப பணியினை செவ்வனே செய்து வரும் MWC விற்கு தமிழ் சாகாவின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்!