சிங்கப்பூர் ஸியான் சாலையில் உள்ள ஒரு இல்லத்தில் சட்டத்துக்கு விரோதமாக சூதாட்டம் ஆடிய 10 ஆண்கள் மற்றும் 1 பெண் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தங்கியிருந்த இடத்தை சோதனை செய்த போது சூதாட்ட பொருட்கள், போதை பொருட்கள், மின் சிகரெட்டுகள் மற்றும் பணம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதையடுத்து, இவர்கள் மீது சட்டவிரோத சூதாட்டம், போதை பொருள் பயன்படுத்துதல் மற்றும் கொரோனா விதிமுறை மீறல் ஆகிய குற்றங்கள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை பரிந்துரையின் பேரில் இவர்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.