TamilSaaga

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட “Ivermectin” : ICA எடுத்த அதிரடி நடவடிக்கை

சிங்கப்பூரில் கடந்த செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 6, 2021 வரை “Ivermectin” என்ற மாத்திரைகள் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்ய முயன்ற ஐந்து தனித்தனி முயற்சிகளை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி அதிகாரிகளின் (ICA) அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இந்து அக்டோபர் 19 அன்று வெளியான ICA-வின் முகநூல் பதிவின்படி, இந்த அதிரடி நடவடிக்கைகளின் போது சுமார் 20,000-க்கும் மேற்பட்ட ஐவர்மெக்டின் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளது.

சாங்கி விமானப் போக்குவரத்து மையம் மற்றும் ஏர்மெயில் டிரான்ஸிட் சென்டர் (Air Corgo Command) ICA அதிகாரிகளால் தபால் பார்சல்கள் மூலம் ஐவர்மெக்டினை சிங்கப்பூருக்கு கடத்த நடந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. மேலும் வாங்குபவர்கள் Ivermectin-ஐ “சுகாதாரப் பொருட்கள்” என்றும் அல்லது அவற்றை குறித்து தகவல் ஏதும் தெரிவிக்காமல் கடத்த முயற்சித்துள்ளனர். இந்த மாத்திரைகளின் இறக்குமதிக்கு HSA அங்கீகாரம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்சல்களின் ஸ்கேன் செய்யப்பட்ட படங்களில் உள்ள முரண்பாடுகளை அதிகாரிகள் கவனித்தபோது இந்த மோசடி கண்டறியப்பட்டது. சிங்கப்பூரில், ஐவர்மெக்டின் ஒட்டுண்ணி புழு நோய்த்தொற்றுகளுக்கு மட்டுமே செயல்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

“ஐவர்மெக்டின் உள்ளிட்ட சட்டவிரோத விற்பனை மற்றும் மருந்துகளை வழங்குவோருக்கு எதிராக HSA தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும். அத்தகைய நபர்கள் மீது நாங்கள் கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றவாளிக்கு அபராதம் 50,000 வெள்ளி வரை விதிக்கப்படும். அல்லது சுகாதார பொருட்கள் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்.

Related posts