TamilSaaga

இந்தியா டிரைவிங் லைசென்ஸ்-ஐ எப்படி சுலபமாக Singapore லைசென்ஸ்-ஆக மாற்றுவது?

வாகனங்கள் இயக்க அனைத்து நாடுகளிலும் தேவையான ஒன்று License. வாகனம் ஓட்டத் தெரிந்தவர்கள் தாங்கள் வாழும் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு License பெற்றிருப்பது அவசியம். அப்பொழுது தான் அவர்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள்.

நீங்கள் சிங்கப்பூர் வாழ் இந்தியராக இருந்தால் உங்களுடைய இந்திய License-ஐ சிங்கப்பூர் License-க்கு மாற்ற முடியும். அதாவது ஏற்கனவே உள்ள இந்திய License-ஐ வைத்து சிங்கப்பூர் License-ஐ பெற முடியும்.

அதற்கு விண்ணப்பிக்க நீங்கள் முதலில் BTT எனப்படும் Basic Theory Test -ஐ முடித்திருப்பது அவசியம்.

சிங்கப்பூரில் உள்ள ஏதேனும் ஒரு driving centre-ல் இந்த Test-ஐ நீங்கள் எழுத முடியும்.

பிறகு Conversion-க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். https://form.gov.sg/63d22456f2bd6c0012319c64 

விண்ணப்பம் சமரிப்பிக்கப்பட்டவுடன் உங்களுக்கான Confirmation Mail வந்துவிடும்.

சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை உங்களின் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்து License Convert செய்வதற்கான தகுதிகள் குறித்து பரிசீலனை செய்வர்.

இதற்க்கு அதிகபட்சம் 6  வார காலம் வரை ஆகலாம்.

கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் ஆவணங்கள்  Verify செய்யப்படும். Appointment குறிக்கப்பட்டு உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் சிங்கப்பூர் போக்குவரத்துக் காவல் தலைமையகத்திற்கு அழைக்கப்படுவர். வரும்பொழுது கீழ்க்கண்ட ஆவணங்களின் Original Copy-ஐ எடுத்துவர வேண்டும்.

  • பாஸ்போர்ட் ( சிங்கப்பூருக்கு வந்த தேதி ஸ்டாம்ப்  செய்யப்பட்டிருக்க வேண்டும்)
  • SG Arrival Card ( சிங்கப்பூர் வந்த பின் கொடுக்கப்படும் Foreign Identification Number-ஐக் கொண்டிருக்கும்)
  • செல்லுபடியாகக்கூடிய Work, Employment அல்லது பிற Pass-கள் (ICA/MOM)
  • ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ள வெளிநாட்டு அல்லது இந்திய ஓட்டுநர் உரிமம்** (smartcard or photocard)
  • இதற்க்கு முன் சிங்கப்பூரில் பணிபுரிந்திருந்தால் அந்த வேலை தொடர்பான விவரங்கள்

சமர்ப்பிக்கப்படும் இந்திய ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்ட தேதியிலிருந்து  காலாவதியாகும் தேதிக்கு உட்பட்டு இருத்தல் அவசியம்.

இது தவிர இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு சுற்றுலா வருபவராக இருந்தால் பன்னாட்டு ஓட்டுநர் உரிமம் பெற்று பெற்று வாகனம் ஓட்டலாம், IDP எனப்படும் இந்த பன்னாட்டு ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைன் மூலம் apply செய்து வாங்க முடியும். இந்த ஓட்டுநர் உரிமம் கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து சிங்கப்பூரில் 1 வருட காலம் வரை செல்லுபடியாகும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க! 

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts