சிங்கப்பூரில் வேலைக்காக பெண்கள் வரும் இரண்டு முக்கிய இடங்களில் ஒன்று தான் நர்ஸ். பெரும்பாலாக வீட்டு பணிப்பெண்ணாக படிக்காதவர்கள் வருவார்கள். படித்த பெண்களில் நர்ஸிங் படித்து விட்டு சிங்கப்பூர் வருவதும் அதிகரித்து இருக்கிறது. நீங்களும் நர்ஸிங் படித்திருந்தால் எப்படி சிங்கப்பூரில் வேலையை தேடி கண்டுபிடிக்கலாம். என்னென்ன டாக்குமெண்ட்ஸ் கேட்பார்கள் என்பது குறித்து தான் இதில் பார்க்க போகிறோம்.
B.Sc நர்ஸிங் அல்லது டிப்ளமோ நர்ஸிங் படித்து விட்டு சிங்கப்பூர் வேலைக்கு வரலாம். இதில் டிப்ளமோவிற்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். இதுவே B.Sc படித்து SPassல் வந்திருந்தால் 1 லட்சம் வரை சம்பளமாக கிடைக்கும்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் செல்ல அக்டோபர் மாதம் Skilled டெஸ்ட் அடிச்சீங்களா? அப்பாடா! ஒரு வழியா ரிசல்ட் வந்தாச்சு… இன்னொரு இனிப்பான செய்தியுடன்!
நர்ஸிங் படித்தவர்களுக்கு singapore nursing boardல் இருந்து வைக்கப்படும் தேர்வினை எழுதி பாஸ் செய்தவர்கள் நேரடியாக SPassல் சிங்கப்பூர் வரலாம். அப்படி எழுதவில்லை என்றால் வொர்க் பெர்மிட்டில் தான் வர முடியும். ஏஜென்ட்டிடம் பேசி வேலை கிடைத்து விட்டால் வேலையில் சேர்ந்த பிறகு 6 மாதம் அல்லது 1 வருடத்திற்குள் சிங்கப்பூரிலேயே இந்த தேர்வினை எழுத முடியும். அதில் பாஸ் செய்தால் SPassக்கு மாறலாம்.
வொர்க் பெர்மிட்டிற்கு அதிகபட்சமாக ஏஜென்ட் கட்டணம் 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சம் வரை கேட்கப்படும். முன் அனுபவம் இருக்கும் பெரிய ஹாஸ்பிட்டல்களில் வேலை செய்தவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். ஏஜென்ட் மூலம் வேலை தேடப்பட்டு ஹாஸ்பிட்டலில் இருந்து ஆன்லைன் மூலம் ஹெச் ஆர் நேர்காணல் நடத்துவார். இதில் பொதுவான கேள்விகள் தான் கேட்கப்படும்.
இதில் SNB தேர்வினை எழுதாமல் சிங்கப்பூர் வருபவர்களுக்கு ஒரு முக்கிய வழிமுறையும் இருக்கிறது. All over மார்க் ஷீட்டினை வாங்கி நீங்கள் வேலை செய்ய இருக்கும் சிங்கப்பூர் நர்ஸிங் கவுன்சிலுக்கு அனுப்ப வேண்டும். இந்த ஒரு காப்பியுடன் பாஸ்போர்ட், அனைத்து தகுதி சான்றிதழை நோட்டரி பப்ளிக்கிடம் அட்டஸ்டட் வாங்கி தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் singapore nursing board தேர்விற்கு அப்ளே செய்ய வேண்டும். அதற்கு கட்டணமாக 5 ஆயிரம் கேட்பார்கள். இது முடிந்தவுடன் நீங்கள் தேர்வாகும் பட்சத்தில் உங்களுக்கு அடுத்த 15 முதல் 45 நாட்களுக்குள் SPass ரெடி செய்யப்பட்டு சிங்கப்பூர் வேலைக்கு வந்து விடலாம்.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற விவாதத்தில் இந்த வருட இறுதிக்குள் சிங்கப்பூரில் 4000க்கும் அதிகமான நர்ஸிங் பணியிடங்களை நிரப்ப இருப்பதாக சுகாதாரத்துறை சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நர்ஸிங் படித்திருந்தால் விரைவில் சிங்கப்பூர் உங்களுக்கு வேலை கிடைக்கும் என்பது மட்டும் உறுதி தான்!