இந்தியாவில் தங்கம் வாங்குவதை விட சிங்கப்பூர் தங்கம் வாங்கினால் ஏறக்குறைய கிராமிற்கு 300 ரூபாய் குறைவு எனக் கூறப்பட்டுள்ளது. எப்படி தங்கம் வாங்கலாம்? யார் தங்கம் வாங்கலாம் எனத் தெரிந்து கொள்ள இதை தொடர்ந்து படிங்க.
சிங்கப்பூரில் தங்கத்திற்கு சேதாரம் போடப்படாது. செய்கூலி மட்டுமே இருக்கும். ஜிஎஸ்டியும் tourist விசாவில் வருபவர்களுக்கு சில சதவீதம் ஜிஎஸ்டி பணத்தினை திரும்ப தந்துவிடுவார்கள். கிராம் $74.50 சிங்கப்பூர் டாலர் எனக் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் 4350 ரூபாயாக மதிப்பிடப்படுகிறது. இந்தியாவிற்கும், சிங்கப்பூருக்கும் தங்கம் கிராமிற்கு 300 முதல் 400 ரூபாயாக வேறுப்படுகிறது.
916 purity-ஐ விட சிங்கப்பூரில் அதிகமாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. சிங்கப்பூரில் தங்கத்திற்கு 7 சதவீதம் ஜிஎஸ்டி கேட்கப்படும். சிங்கப்பூரில் tourist விசாவில் வருபவர்கள் தங்கம் வாங்க பாஸ்போர்ட் மட்டும் கொடுத்தால் போதும். அந்த தகவலை வைத்து நீங்கள் வாங்கிய தங்கம் அதற்குரிய ஜிஎஸ்டி குறித்து இணையத்தில் குறிப்பிடப்பட்டு விடும். இதில் 5.5 சதவீதம் ஜிஎஸ்டி சிங்கப்பூர் விட்டு மீண்டும் கிளம்பும்போது விமான நிலையத்தில் விரும்பிய பணத்தில் வாங்கி கொள்ளலாம்.
செய்கூலி சிங்கப்பூரை பொருத்தவரை கிராமிற்கு 2 அல்லது 3 சிங்கப்பூர் டாலர் என்ற அளவில் மட்டுமே தோராயமாக இருக்கும். சதவீதமாக வைக்க மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது. சிங்கப்பூரில் தங்கம் வாங்க Serangoon ரோடில் தான் அதிக கடைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு தங்க நகைகளை வாங்கிச் செல்ல திட்டமிட்டால் கவனமாக இருக்க வேண்டும். இந்தியாவில் தங்கத்தினை இறக்குமதி செய்யும் போது சில கட்டுபாடுகள் இருக்கிறது. மேலும், கூடுதலாக மூன்று சதவீத ஜிஎஸ்டி வரி பொருந்தும். இதன் விளைவாக மொத்த இறக்குமதி வரி 18.45 சதவீதமாக உள்ளது. மே 22ல் தங்கம் இறக்குமதியில் இந்தியா ஆண்டுக்கு 790 சதவீதம் அதிகரிப்பை பதிவு செய்ததால் வரிகள் அதிகரிக்கப்பட்டன.