BCA-Approved Skill Test Centers in India: சிங்கப்பூரில் கட்டடத் தொழில், கப்பல் பணி மற்றும் இயந்திர இயக்கம் போன்ற துறைகளில் பணிபுரிய விரும்பும் தொழிலாளர்கள் BCA (Building & Construction Authority) எனப்படும் கட்டட மற்றும் கட்டுமான ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிகளை முடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
BCA பயிற்சியின் நோக்கம்:
தொழில் பாதுகாப்பு: கட்டுமானத் தளங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முதன்மையான நோக்கம். தொழில் திறன் மேம்பாடு: தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தி, உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்வது.
தரமான கட்டுமானம்: உயர்தர கட்டுமானப் பணிகளை உறுதி செய்வதற்குத் தேவையான திறன்களை வழங்குவது.
BCA பயிற்சி இரண்டு நிலைகளில் வழங்கப்படுகிறது:
- Basic Skilled: அடிப்படை திறன்களை வழங்கும் இந்த நிலை, கட்டுமானத் தொழிலில் புதியவர்களுக்கானது.
- Higher Skilled: மேம்பட்ட திறன்களை வழங்கும் இந்த நிலை, ஏற்கனவே அனுபவம் உள்ள தொழிலாளர்களுக்கானது.
BCA பயிற்சியை முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். BCA பயிற்சியை முடித்த தொழிலாளர்கள், சிங்கப்பூரில் Skilled Worker விசாவிற்கு தகுதியுடையவர்கள். இந்த விசா, அவர்கள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் நீண்ட காலம் தங்கி வேலை செய்ய அனுமதிக்கிறது. Skilled Worker களுக்கு பொதுவாக மாதம் 2000 சிங்கப்பூர் டாலர்களுக்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது. இது வாழ்க்கைச் செலவுகள் மற்றும் சேமிப்பிற்கு போதுமானதாக இருக்கும்.
BCA பயிற்சி: இந்தியாவில் இருந்து படிக்க முடியுமா?
இந்தியாவிலும் இதற்கான பல பயிற்சி மையங்கள் உண்டு. சாதாரண பயிற்சி மையங்களும் இது போன்ற திறன் சார்ந்த பயிற்சிகளை வழங்குகின்றன. அதற்கான சான்றிதழ்களையும் வழங்குகின்றன. ஆனால் அவை அனைத்தும் BCA-வால் ஏற்றுக்கொள்ளப்படாது. இந்தியாவில் குறிப்பிட்ட சில பயிற்சி மையங்கள் மட்டுமே சிங்கப்பூர் BCA அங்கீகாரம் பெற்றுள்ளன. இந்த மையங்கள் பொதுவாக பெரிய நகரங்களில் அமைந்துள்ளன.
இந்தியாவில் மொத்தம் 3 பயிற்சி மையங்கள் BCA-வால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவை சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் மட்டுமே உள்ளது.
சென்னையில் இருக்கும் பயிற்சி மையம் மற்றும் அதன் விவரங்கள்:
Hytech Goodwill Training And Testing Centre Private Limited, Chennai
இந்த நிறுவனம் 1997 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் முன்னணி கட்டுமான நிறுவனமான M/s HYTECH BUILDERS PTE LTD மற்றும் இந்தியாவின் முன்னணி வேலைவாய்ப்பு நிறுவனமான M/s GOODWILL MANPOWER SERVICES ஆகியவற்றுடன் இணைந்து நிறுவப்பட்டது. கட்டுமானத் தொழில் தொடர்பான 16 வகையான தொழில்களுக்கான பயிற்சியை தற்போது வழங்குகிறது. இதற்காக சிங்கப்பூர் கட்டுமான மற்றும் கட்டுமான ஆணையம் (BCA) ஒவ்வொரு மாதமும் தொழில் திறன் தேர்வுகளை நடத்துகிறது. சிங்கப்பூர் தொழிலாளர் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட கட்டுமான பாதுகாப்பு திசைநிலைப்படுத்தல் படிப்பும் (eCSOC) இங்கு வழங்கப்படுகிறது.
சிங்கப்பூர் கட்டுமானத் துறை நிறுவனங்கள் எவ்வாறு பணியாளர்களை தேர்வு செய்கிறது?
இந்த நிறுவனம், சிங்கப்பூர் கட்டுமான ஆணையம், இந்திய அரசு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்டது.
இங்கே மொத்தம் 16 விதமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன:
1) Aluminium Formwork (Enhanced)
2) Doors & Windows Installation (Timber)
3) Ducting Installation for Air-Con & Ventilation
4) Electrical Wiring Installation
5) Interior Drywall Installation
6) Pipe Fitting
7) Plastering
8) Plumbing & Pipefitting
9) Precast Kerb & Drain Laying
10) Steel Reinforcement Work
11) Structural Steel Fitting
12) Suspended Ceiling Installation (Acoustical)
13) Thermal Insulation (Pipework)
14) Tiling
15) Timber Formwork (Enhanced)
16) Waterproofing
மேற்கண்ட அனைத்து பயிற்சிகளையும் நீங்கள் இந்தியாவில் பயில முடியும். இது போல ஒவ்வொரு நாடுகளிலும் பல பயிற்சி மையங்கள் உண்டு. நீங்கள் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வேலைக்கு வர விரும்பினால் மேற்கண்ட ஏதேனும் பயிற்சியை முடித்து, சான்றிதழ் பெற்றாக வேண்டும். இந்த பயிற்சிகளை சிங்கப்பூர் சென்றும் படிக்கலாம். ஆனால் அதற்க்கு Pre-Approval என்ற ஆவணம் உங்கள் வேலை நிறுவனத்தால் வழங்கப்பட வேண்டும். அதன்பின் நீண்ட செயல்முறைகளுக்கு பின்னரே ஒரு கட்டிட தொழிலாளி பணியமர்த்தப்படுவர்.
சிங்கப்பூரில் கட்டுமானத் தொழிலில் பணிபுரிய விரும்பும் அனைவரும் BCA பயிற்சியை மேற்கொள்வது மிகவும் அவசியம். இந்த பயிற்சி தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களின் திறன்களை மேம்படுத்தி, தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.