சிங்கப்பூர் வேலைக்காக ஒவ்வொரு நாளும் பெரிய கஷ்டத்தினை தாங்கி தேடிக்கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு இருக்கும் பெரிய கனவே முதல் நாள் சிங்கப்பூர் மண்ணில் கால் வைத்துவிட வேண்டும் என்பதே. இதற்காக பல இடங்களில் கடனை வாங்கி இன்ஸ்டியூட்களில் சேர்ந்து skill டெஸ்ட் முடித்து அதன் ரிசல்ட்டிற்கு காத்திருக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
நவம்பர் முதல் 10 நாட்களை வரை வந்திருக்கும் skill ரிசல்ட். அடுத்தடுத்து எப்போ வரும் என்ற சரியான தகவல்கள் இல்லாமல் சிங்கப்பூர் கனவில் இருக்கும் இளைஞர்கள் மனம் வருந்தி இருக்கின்றனர். இவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தான் அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்து இருக்கிறார்.
நேற்று பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பல தகவல்கள் விவாதிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, மனிதவள அமைச்சர் டான் சீ லெங், NTS ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் முதலாளிகள் 8% துணை கோட்டாவில் வேலைக்கு எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு குறைந்தபட்சமாக $2,000 மாதச் சம்பளம் பெறுவார்கள் என்றும் அறிவித்தார்.
ஊதிய தேவை என்பது பாதுகாப்புக்கும், சாதாரண இடங்களில் இருந்து அதிக திறன் வாய்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முதலாளிகளை ஊக்குவிக்கும்.
தற்போதைய NTSல் S பாஸ் வைத்திருப்பவர்களை வொர்க் பெர்மிட்டில் சேர்க்கும் முதலாளிகளுக்கு சம்பள அளவுகோலைப் பூர்த்தி செய்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது. NTS பட்டியலை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வதற்காக ஏஜென்சிகள் மற்றும் தொழில்துறைகளுடன் MOM தொடர்ந்து பணியாற்றும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.
NTS பணி அனுமதி பெற்றவர்களில்:
- இந்திய உணவகங்களில் சமையல் செய்பவர்கள்.
- உணவு பதப்படுத்தும் நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள், எ.கா. காய்கறி ஊறுகாய், மசாலா மற்றும் சாஸ் தயாரிப்பாளர்கள்.
- தாள் உலோகத் தொழிலாளர்கள்
- வெல்டர்கள் மற்றும் flame cutters
- உலோக மோல்டர்கள் மற்றும் கோர்மேக்கர்ஸ்
- ரிகர்கள் மற்றும் கேபிள் ஸ்ப்ளிசர்கள்
- கட்டமைப்பு உலோகத் தயாரிப்பாளர்கள் மற்றும் எரெக்டர்கள்
மேற்கூறிய வேலைக்கு வரும் செப்டம்பர் முதல் வொர்க் பெர்மிட்டில் வேலைக்கு ஆட்களை எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.