சிங்கப்பூரில் மோசமான பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் (WSH) செயல்திறன் கொண்ட நிறுவனங்களுக்கு செவ்வாய் (ஜூன் 14) முதல் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு ஆய்வுகளின் போது குற்றங்கள் கண்டறியப்பட்டால் அதற்கான அதிகபட்சம் இரட்டிப்பாக்கப்படும். அதாவது, $5,000 வரை வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இன்று (ஜூன்.13) Defu Lane-ல் பணியிடப் பாதுகாப்பு ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மனிதவள மூத்த இணை அமைச்சர் ஜாக்கி முகமத், “இன்றைய ஆய்வுகள் உட்பட, எங்கள் சமீபத்திய ஆய்வுகளில் இருந்து, நிறுவனங்கள் பணியிடத்தில் பாதுகாப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது தெளிவாகிறது” என்றார்.
பணியிட மரணங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, இந்த நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. பணியிட மரணங்கள் குறித்து இந்த ஆண்டு இன்றுவரை 26 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2016 ஆம் ஆண்டடுக்கு பிறகு இப்போதுதான் இவ்வளவு வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பெரிய அளவில் காயங்கள் பதிவாகியுள்ளதாக MOM தெரிவித்துள்ளது.
65 சதவீத இறப்புகள் மற்றும் பெரிய காயங்கள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் பணிபுரியும் தொழிலாளர்களுக்கே ஏற்பட்டுள்ளது என்றும் MOM கூறியுள்ளது.
2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 1,400 க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் நிறுவனங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகமாகும்.
இந்த ஆய்வுகள் பெரும்பாலும் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் கடல் கப்பல் கட்டும் துறைகளை மையமாகக் கொண்ட நிறுவனங்களில் தான் நடத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பற்ற பணி நிலைமைகளை தங்கள் நிறுவனங்களில் இருந்தால் ஊழியர்கள் தயக்கமின்றி தங்கள் மேற்பார்வையாளர்களுக்கோ அல்லது MOM-விடமோ தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் Zaqy கூறினார்: எனவே நிறுவனங்கள் இனி தங்கள் ஊழியர்கள் மேல் உச்சபட்ச அளவிலான அக்கறை எடுத்து, பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.