TamilSaaga

அதிர்ஷ்டமில்லாத “பயண நடைமுறை” எனும் பெயரை “பயணப் பாதை” என மாற்றலாம் – அமைச்சர் கலகலப்பு

சிங்கப்பூர் – ஹாங்காக்கிற்கு இடையிலே இருதரப்பு பயண நடைமுறை செயல்படுத்தும் திட்டம் கொரோனா தொற்று காரணமாக நிகழாமல் இருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த பயண நடைமுறையை துவங்க அறிவிப்பு வெளியிட்ட போது ஹாங்காக்கில் கொரோனா தொற்று அதிகரித்தது.

இந்தாண்டு மார்ச் மாதம் மீண்டும் அந்த நடைமுறையை துவங்க அறிவித்த போது சிங்கப்பூரில் கொரோனா அதிகரித்தது. இதன் காரணமாக இரண்டு முறையும் இந்த நடைமுறையை துவங்க முடியவில்லை.

2021 இறுதிக்குள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பயணங்கள் துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி Straits Times க்கு சுகாதார அமைச்சர் ஓங் பேட்டி அளிக்கும் போது
” பயண நடைமுறை (Travel Bubble) என்ற பெயருக்கு அதிர்ஷ்டமில்லை அதனால் தான் இரு முறை தடைப்பட்டது, இனி இதனை பயணப் பாதை (Travel Corridor) என மாற்றுவோம்” என கலகலப்பாக வேடிக்கைகாக கூறினார்.

Related posts