சிங்கப்பூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 9,50,000 குடும்பங்கள் இந்த அக்டோபரில் காலாண்டு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தள்ளுபடியைப் பெறுவார்கள் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவை GST வவுச்சர் (GSTV) – யு – சேவ் முன்முயற்சி மூலம் வழங்கப்படும். மேலும் வீட்டு உபயோக பில்களுக்கு ஆஃப்செட் மூலம் வரவு வைக்கப்படும் என்று நிதி அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 1) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிதியாண்டில் GSTV U Save மற்றும் U Save Special கட்டணத் திட்டங்களின் கீழ் விநியோகிக்கப்பட்ட மொத்த தொகை சுமார் 460 மில்லியன் வரை இருக்கும் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. குடும்பங்கள் பெறும் இந்த தொகை HDB குடியிருப்பு வகையை குறிக்கப்படுகிறது. ஒன்று மற்றும் இரண்டு அறைகள் கொண்ட HDB ஃப்ளாட்களில் உள்ள குடும்பங்கள் பொதுவாக மூன்று முதல் நான்கு மாதங்கள் பயன்பாட்டு பில்களில் சராசரியாக இந்த தள்ளுபடியைப் பெறுகின்றன.
சிங்கப்பூர் நிதியமைச்சகம் வெளியிட்ட பதிவு
U-Save ஸ்பெஷல் பேமெண்ட்டைச் சேர்ப்பதன் மூலம், தள்ளுபடிகள் அவற்றின் பயன்பாட்டு பில்களில் சுமார் 4½ முதல் ஆறு மாதங்கள் வரை இருக்கும் என்றும் சிங்கப்பூர் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல மூன்று மற்றும் நான்கு அறைகள் கொண்ட HDB ஃப்ளாட்களில் உள்ளவர்களுக்கு, கூடுதல் ஆதரவு சுமார் 1½ முதல் மூன்று மாதங்களுக்கு அவர்களின் பயன்பாட்டு பில்களுக்கு சமமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல GSTVயின் அடுத்த சுற்று – இந்த நிதியாண்டுக்கான யு – சேவ் தள்ளுபடிகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் இருக்கும்.
இந்த் U-Save சிறப்பு கட்டணம் முன்னர் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது. இந்த ஆண்டு பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட வீட்டு ஆதரவு தொகுப்பின் ஒரு பகுதியாக, இந்த நிதியாண்டில் வழக்கமான GST தள்ளுபடிகளில் இருந்து 50 சதவிகிதம் கூடுதல் தள்ளுபடிகளை குடும்பங்கள் பெற்றன. இனி இந்த நிதியாண்டிற்கான சிறப்பு கட்டணங்கள் எதுவும் இல்லை என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.