சிங்கப்பூர் பொருத்தவரை கார் வாங்குவது என்பது சற்று கடினம் தான்! மிகுந்த விலையேற்றம் அதிகப்படியான வரி போன்றவை சொந்தமாக கார் வாங்குவதை சற்று கடினமாக்கிவிட்டன. சிங்கப்பூரில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பொது போக்குவரத்துக்களைத் தான் பயன்படுத்துவர். தேவைப்படின் வாடைகைக்கு கார்களை எடுத்துக் கொள்வர்.
அப்படி எடுக்கப்படும் வாடகைக்கார்கள் அதன் பிராண்டு மற்றும் மாடல் பொருத்து மாறுபடும். இங்கு உங்களுக்கு அனைத்து வகையான கார்களும் வாடகைக்கு கிடைக்கும்.
கார்களை வாடகைக்கு எடுக்க முக்கியமான ஆவணம் லைசன்ஸ் அதாவது ஓட்டுநர் உரிமம். ஒருவேளை நீங்கள் வெளிநாட்டவராக இருந்தால் IDP எனப்படும் பன்னாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியது அவசியம். IDP என்பது பல நாடுகளில் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் ஆகும். மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும் இதனை நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து வாங்கலாம். அதற்க்கு நீங்கள் உள்நாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது காட்டாயம். மேலும் 18 வயது நிறைந்தவர்க்கே இந்த பன்னாட்டு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். இது குறித்த விரிவான தகவல்களுக்கு கீழே உள்ள லிங்க்-கை கிளிக் செய்யவும்.
https://tamilsaaga.com/sg/driving-rules-of-singapore/
சிங்கப்பூரில் கார் வாடகைக்கு எடுக்க என்னென்ன விதிமுறைகள் உள்ளன!
1. கார் வாடகைக்கு எடுக்கும் நபர் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். IDP அல்லது உள்நாட்டு உரிமத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவை ஆங்கில மொழிபெயர்ப்பில் இருக்க வேண்டியது அவசியம். சிங்கப்பூர் பொருத்தமட்டில் 3 வருடத்திற்கான உங்கள் IDP ஒரு வருடம் வரை மட்டுமே செல்லுபடியாகும்.
2. வாடகைக்கு எடுக்கும் நபருக்கு குறைந்தபட்சம் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். சில நிறுவங்களின் விதிகளைப்பொறுத்து 23 அல்லது 25 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
3. காரை இயக்கும் நபருக்கு குறைந்தது 2 வருடம் கார் இயக்கிய அனுபவம் இருந்திருக்க வேண்டும்.
4. சில கார் வாடகை நிறுவனங்கள் உங்களது பாஸ்போர்ட், காப்பீட்டு ஆவணம் மற்றும் கிரெடிட் கார்டு விபரங்கள் போன்ற தகவல்களை சேகரிப்பர்.
5. முக்கியமாக கார் இயக்க சிங்கப்பூரின் அடிப்படை சாலை விதிகள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். சிங்கப்பூரின் சாலை விதிகளை அறிந்துகொள்ள இந்த லிங்கைப் பயன்படுத்தவும்!
https://tamilsaaga.com/sg/driving-rules-of-singapore/
சிங்கப்பூரில் எந்தெந்த வகையான கார் வாடகை முறைகள் உள்ளன?
1. Economy Rental – குறைவான புக்கிட் கொண்டவர்களுக்கான இந்த கார்கள், வாடகை குறைவாகவும் சிறந்த எரிபொருள் சக்தியுடனும் இருக்கும். சிங்கப்பூரின் சாலைகளில் எரிபொருளுக்கும் பட்ஜெட் இருந்தால் இந்த வகைக் கார்கள் பயனுள்ளதாக இருக்கும்.
2. Luxurious Rentals – Bemz, Audi மற்றும் BMW போன்ற சொகுசு கார்களும் எளிதான முறையில் வாடகைக்கு கிடைக்கும். இது போன்ற சொகுசு கார்களில் பயணிக்க ஆசைப்படுபவர்கள் எளிதான முறையில் வாடகை கார்கள் மூலம் சிறந்த அனுபவத்தைப் பெறலாம்.
3. Long Time Rentals – வேலை அல்லது சுற்றுலா காரணமாக நீண்ட நாட்களுக்கு கார் தேவைப்பட்டால் அதற்கும் சிங்கப்பூர் ரெண்டல் சேவை சிறந்த தேர்வுகளை வழங்குகிறது.
4. Hourly Rentals – ஒருவேளை சில மணிநேரங்களுக்கு மட்டும் உங்களுக்கு கார் தேவைப்பட்டால் மணிக்கணக்கில் வாடகைக்கு வழங்கும் சேவையும் இங்கு உள்ளது.
5. Airport Exchange – நீங்கள் சிங்கப்பூர் வந்தவுடன் உங்களுக்கு கார்கள் வாடகைக்கு தேவைப்பட்டால் விமான நிலையத்தில் உள்ள வாடகை கார் சேவையை அணுகினால் தேவைகளைப் பொருத்து உங்களுக்கு வாடகைக் கார்கள் ஒழுங்கு செய்யப்படும்.
சிங்கப்பூரில் உள்ள சில பிரபலாமான கார் வாடகை நிறுவனங்கள்:
1. Hertz – விலை, தேர்வுகள் என அனைத்திலும் சிறந்த நிறுவனமாக திகழ்கிறது.
2. Priceline – மற்ற நிறுவங்களின் விலைகளுடன் சாப்பிடும்பொழுது சிறந்த நிறுவனமாக திகழ்கிறது.
3. Turo – கார்களில் உள்ள சிறப்பம்சங்களுக்காக பெயர்போன நிறுவனம்.
4. Enterprise – சிறந்த வாடிக்கையாளர் சேவையைக் கொண்ட நிறுவனம்.
5. Zipcar – மணிக்கணக்கில் வாடகைக் கார்கள் பெற சிறந்த நிறுவனம்.
6. Alamo – ஒருவழித்தடத்தில் பயணிக்க விருப்புபவர்களுக்கு சிறந்த தேர்வு.
7. Fox – சிறந்த தள்ளுபடிகளுக்கு பெயர்போன நிறுவனம்.
8. Dollar Car Rental – குறைந்த விலைக்கு பிரபலமான நிறுவனம்.
9. Kyte – உரிய நேரத்தில் டெலிவரி கொடுப்பதில் சிறந்த நிறுவனம்.
10. ACE Rent A Car – நீண்டகால ,மற்றும் நம்பிக்கையான நிறுவனம்.
மேற்கண்ட நிறுவங்களின் ஒரு நாள் கார் வாடகை குறைந்தபட்சம் 35 SGD வரை இருக்கும். செக்யூரிட்டி டெபாசிட் குறைந்தபட்சம் 250 முதல் அதிகபட்சம் 500 SGD வரை மாறுபடும். நிறுவனங்கள் மற்றும் நீங்கள் எடுக்கும் கார்களைப் பொருத்து இந்த விலை மாறுபடும். கார்களை வாடகைக்கு பெரும் முன் காரின் அமைப்புகள் சரியாக இயங்குகிறதா என்பதை சோதனை செய்து கொள்ளவும். காருக்கு காப்பீடு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலும் கார்களை இயக்கும்பொழுது ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் உடனே நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்!
மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி சுமூகமான டிரைவிங் அனுபவத்தைப் பெற்றிடுங்கள்!