சிங்கப்பூரில் ஸ்ரீ சிவா கிருஷ்ணா கோவில் என்பது சிங்கப்பூரில் உள்ள ஒரு முக்கியமான இந்து கோவிலாகும். இது சிவபெருமான் மற்றும் திருமாலின் அவதாரங்களில் ஒருவரான கிருஷ்ணனை இணைத்து வழிபடும் ஒரு தனித்துவமான கோவில்.
இந்த கோவில் 1962-ம் ஆண்டு, குஞ்சுகிருஷ்ணன் என்பவர் செம்பவாங் பகுதியில் ஒரு சிறிய நிலத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு சில சன்னதிகளை நிறுவி, வழிபாட்டைத் தொடங்கினார். இந்த இடம் டாக்சி ஓட்டுநர்களின் ஓய்வு இடமாக மாறியது. குஞ்சுகிருஷ்ணனின் மறைவுக்குப் பின், வேலாயுதம் என்பவர் இந்த இடத்தை மேலும் விரிவுபடுத்தி, புதிய தெய்வங்களை இங்கு கொண்டு வந்தார்.
பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, இந்தக் கோவிலுக்கு ரீ சிவா-கிருஷ்ணா கோவில்” என பெயரிடப்பட்டது. கோவிலின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 1982-ம் ஆண்டு மார்சிலிங் ரைஸில் புதிய இடத்திற்கு இடம் மாற்றப்பட்டது. 1987-ம் ஆண்டு புதிய கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கி, 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலின் இரண்டாவது கும்பாபிஷேகம் 23 மார்ச் 2008 அன்று நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் மூன்றாவது குடமுழுக்கு விழா நாளை (09-02-2025) நடைபெற இருக்கிறது. பிரதமர் லாரன்ஸ் வோங் அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார். COVID-19 நோய்த்தொற்றால் கிட்டத்தட்ட மூன்று ஆண்டு தாமதத்திற்குப் பிறகு குடமுழுக்கிற்குத் தயாராகி வருகிறது ஆலயம்.
மஹாகும்பாபிஷேக விழா 09.02.2025, ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதால், அனைத்து பக்தர்களையும் கலந்து கொண்டு ஸ்ரீ சிவ-கிருஷ்ணர் பெருமானின் அருளைப் பெற ஆலய நிர்வாகம் சார்பாக மனதார அழைக்கின்றனர்.
கோவில் முகவரி
Sri Siva Krishna Temple
31, Marsiling Rise,
Singapore 739127.
Nearest MRT – Woodlands MRT
Nearest Bus Interchange – Woodlands Regional Bus Interchange
Board bus 913, 913E or 178 at Berth No.12. Alight at the second bus stop.
சிங்கப்பூரில் ஸ்ரீ சிவா கிருஷ்ணா கோவிலின் வரலாறு