TamilSaaga

வலுகட்டாயமாக பலாத்காரம் செய்ய முயற்சி… “அந்த பெண் விரும்பியதாக நினைத்தேன்” – சிங்கப்பூர் Grab ஒட்டுனர் அத்துமீறல்

சிங்கப்பூரில் Grab ஓட்டுனர் ஒருவர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் வலுக்கட்டாயமான பாலாத்காரம் செய்ய முற்படுதல் போன்ற குற்றங்களுக்கான விசாரணை நேற்று (ஜீலை.19) நீதிமன்றத்தில் நடைபெற்றது.

2018ல் மே மாதம் 19ம் தேதி டான் யே சின் என்ற 47 வயது Grab ஓட்டுனர் செலிட்டர் ஏரோ ஸ்பேஸ் பார்க்கின் பாருக்கு தனது இரு நண்பர்களுடன் சென்று ஏறத்தாழ 5 க்ளாஸ் மதுபானம் (Beer) அருந்திய 19 வயது இளம்பெண்ணை தனது காரில் ஏற்றியுள்ளார்.

திடீரென அந்த பெண்ணின் கையை பிடித்து அமைதிப்படுத்த முயன்றுள்ளார். மேலும் அவரின் கைப்பையிலிருந்து மொபைல் போனை எடுக்க முயற்சி செய்து அதில் அடையாள அட்டை மட்டும் கிடைக்கவே மீண்டும் அதனை பையிலேயே வைத்து இருக்கிறார்.
பிறகு அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் ஓட்டுனர் டான் மீது வைக்கப்பட்டிருந்தது. அவரது வழக்கறிஞர் இது இருவரின் ஒருமித்த கருத்தோடு தான் நிகழ்ந்ததாக வாதாடினார்.

கடந்த திங்களன்று டானின் வழக்கறிஞர் அவருக்கான நிலைப்பட்டை முன்வைத்தார். டான் விமான விற்பனை மேலாளராக இருந்ததை பற்றியும் 2016 வருவாய்க்காக Grab ஓட்டுனாராக வார இறுதி நாட்களில் பணியாற்றியதாகவும் பதிவு செய்தார்.

சம்பவம் நடந்த அன்று அதிகாலை 3 மணிக்கு டான் திடீரென காரை நிறுத்தி இந்த செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் டான் தரப்போ அடுத்த நாள் காலை தனது குழந்தைக்கு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு இருந்ததால் காரை 3 மணிக்கு நிறுத்தியதாக கூறினார்.

பிறகு அந்த பெண்ணை வீட்டில் இறக்கி விட்டதும் அந்த பெண் விலகாமல் கதவின் பக்கவாட்டில் நின்று பார்த்ததாகவும் அதனால் தனது உணர்ச்சிகளுக்கு ஆதரவாக காரில் இருந்து இறங்கி அந்த பெண்ணை மீண்டும் காருக்குள் அழைத்துச்சென்றதாகவும் அதற்கு அந்த பெண் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறினார்.

பிறகு தனது காரில் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முற்பட்டதாகவும் எதிர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதை பற்றி டான் கூறும் போது, உணர்ச்சிவயத்தால் இந்த செயலை செய்துவிட்டதாகவும், இதனால் தான் வருந்துவதாகவும் தெரிவித்தார். மேலும் அந்த பெண்ணிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்காததால் மீண்டும் பெண்ணை விட்டில் இறக்கிவிட்டு உடைமைகளை அளித்ததாகவும் தெரிவித்தார். மறுநாள் காலை காவல்துறை டானை விசாரணைக்கு அழைத்திருக்கிறது.

இதற்கிடையே மற்றோரு Grab ஓட்டுனர் சாலையின் குறுக்கே அதிகாலை 4.40 மணிக்கு ஒரு பெண் அரை நிர்வாணமாக இருப்பதை கண்டுள்ளார். பின்நாளில் அந்த பெண்ணின் உள்ளாடைகளில் டானின் DNA கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை மற்றும் பலாத்காரம் செய்திருப்பதாக உட்படுத்தப்பட்டால் 20 ஆண்டு வரை ஜெயில் தண்டனை மற்றும் அபராதமும், உணர்ச்சி சீற்றத்தால் குற்றம் செய்ததாக உறுதிசெய்யப்பட்டால் 2 ஆண்டு ஜெயில் மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Related posts