TamilSaaga

சிங்கப்பூரில் வேலைப்பார்க்க இதுவே “பெஸ்ட்” நிறுவனம்.. ஒட்டுமொத்த ஊழியர்களும் திரண்டு வந்து ஆதரவு – The Straits Times அறிவிப்பு

The Straits Times (ST) மற்றும் குளோபல் தரவு நிறுவனமான Statista நடத்திய ஆய்வு முடிவின் படி, 2022 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் சிறந்த நிறுவனமாக கூகுள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

“சிங்கப்பூரின் சிறந்த நிறுவனம் 2022” கணக்கெடுப்பு என்பது சிங்கப்பூரில் உள்ள சிறந்த 200 நிறுவனங்களை தரவரிசைப்படுத்துவது ஆகும். ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தது 200 பணியாளர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

இதற்காக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2021 இல் நடத்தப்பட்ட ஆன்லைன் கணக்கெடுப்பில் 17,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க – “அது வெறும் பொம்மை துப்பாக்கி சார்”.. வடிவேலு பாணியில் வங்கி ஊழியரை மிரட்டி கொள்ளையடித்த சிங்கப்பூரர் – வீட்டில் வைத்து தூக்கிய போலீசார்

நிறுவனங்களுக்கு மொத்தமாக 10 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

இதில், கூகுள் நிறுவனம் 9.16 மதிப்பெண்களுடன் இந்த ஆண்டின் சிறந்த பணியமர்த்தும் நிறுவனமாகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB) 8.72 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

அடுத்த 8 இடங்கள் பிடித்த நிறுவனங்கள் பின்வருமாறு,

The Lego Group
Apple
Wise
Proctor & Gamble
Rolls-Royce
Tanglin Trust School
United World College of Southeast Asia
City Energy

ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts