சிங்கப்பூரில் இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 30) காலை பெய்த கனமழையால் ஹூகாங் அவென்யூ 8ல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது மற்றும் டம்பைன்ஸ் எக்ஸ்பிரஸ்வே (TPE) செல்லும் புங்கோல் வே ஸ்லிப் சாலையில் வெள்ளம் ஏற்பட்டது. சிங்கப்பூரைச் சுற்றியுள்ள பல பகுதிகள் திடீர் வெள்ள அபாயம் இருப்பதாக PUB எச்சரித்துள்ளது.
தற்போது வெள்ளம் ஏற்பட்ட இரண்டு பகுதிகளுக்கு உதவி வழங்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தேசிய நீர் நிறுவனம் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு தளங்களில் தற்போது வெள்ளம் குறைந்துவிட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கனமழை காரணமாக, கீழே குறிப்பிட்டுள்ள இந்த பகுதிகளில் வடிகால்கள் மற்றும் கால்வாய்களில் நீர் மட்டம் 90 ஐ எட்டியுள்ளது. மேலும் கீழே குறிப்பிட்டுள்ள இந்த திடீர் வெள்ள அபாயம் இருப்பதால் அடுத்த 1 மணி நேரத்திற்கு பின்வரும் பகுதிகளைத் தவிர்க்கவும் என்று PUB வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
சியாங் குவாங் அவென்யூ (யூனிட் 35)
பேல்ஸ்டியர் சாலை / தாம்சன் சாலை
புவாய் ஹீ அவென்யூ / சியாக் கியூ அவென்யூ
சைம் டார்பி மையம்
மேல் பயா லெபார் சாலை
சுங்கே டோங்காங் (யியோ சூ காங் சாலை)
ஹேப்பி அவென்யூ நோர்த் (Lamp Post 11)
இந்திய பெருங்கடல் Dipole காரணமாக சிங்கப்பூரில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.