TamilSaaga

சிங்கப்பூரில் CTE நெடுஞ்சாலையில் ஒரே நாளில் ஐந்து கார்கள் விபத்து – போக்குவரத்து முடக்கம்!

சிங்கப்பூர் மத்திய விரைவுச்சாலையில் (Central Expressway – CTE) ஐந்து கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 34 வயது பெண் ஒருவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து CTE நெடுஞ்சாலையில் சீலத்தார் விரைவுச்சாலை (Seletar Expressway – SLE) நோக்கி செல்லும் பாதையில், ஆங் மோ கியோ அவென்யூ 1 வெளியேறும் இடத்திற்கு முன் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தின் காரணமாக நெடுஞ்சாலையின் ஐந்து வழித்தடங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்றில், ஐந்து வழித்தடங்களும் வாகனங்களால் நிரம்பி, கிட்டத்தட்ட ஸ்தம்பித்து நின்ற காட்சி பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவில், விபத்து காரணமாக சாலையின் வலதுபுறம் இருந்த இரண்டு வழித்தடங்கள் காவல்துறையினரால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது தெரிய வந்தது. வெள்ளை நிற கார் ஒன்றின் முன்பகுதி நெடுஞ்சாலையின் மைய தடுப்புச் சுவரில் மோதிய நிலையில் காணப்பட்டது. மேலும் இரண்டு கார்களும் இந்த விபத்தில் சேதமடைந்துள்ளன.

சாங்கி விமான நிலையத்தில் தொடர் திருட்டு: 32 வயது வெளிநாட்டு ஆடவர் கைது!

சம்பவ இடத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிந்திருந்தனர். குறைந்தது இரண்டு ஆம்புலன்ஸ்கள் உடனடியாக வந்து சேர்ந்தன. இந்த விபத்தில் காரில் பயணித்த 34 வயது பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இரண்டு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்திற்கான காரணம் மற்றும் மற்ற விவரங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகின்றன. இந்த விபத்தின் காரணமாக CTE நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் நீடித்தது குறிப்பிடத்தக்கது. வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts