உலக அளவில் பிரபலமான அமெரிக்க மின்சார வாகன தயாரிப்பாளரான ‘டெஸ்லா’ தனது முதல் ஷோரூமை தற்போது சிங்கப்பூரில் உள்ள ராஃபிள்ஸ் சிட்டியில் இன்று (ஜூலை 30) திறந்துள்ளது. சுமார் 143 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த ஷோரூம், One Assemblyக்குள்ளேயே முதல் தலத்தில் உள்ளது.
மேலும் இந்த ஷோரூமில் தற்போது டெஸ்லா மாடல் 3 மற்றும் நான்கு கதவுகள் கொண்ட செடான் மாடல் கார்கள் இடம்பெறும், மேலும் இது தற்போது சிங்கப்பூரில் விற்பனைக்கு கிடைக்கிறது மேலும் இந்த விலை உரிமைச் சான்றிதழை சேர்க்காமல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து டெஸ்லா நிறுவனம் தனது வலைத்தளத்தில் வெளியிட்ட தகவலின்படி, டெஸ்லா மாடல் 3-க்கான மதிப்பிடப்பட்ட விலை 1,13,245 சிங்கப்பூர் வெளியாகும். மேலும் இந்த விலை உரிமைச் சான்றிதழை சேர்க்காமல் என்பது குறிப்பிடத்தக்கது.
இது அமெரிக்காவில் செலவு செய்வதை விட இரண்டு மடங்கு அதிகம், அங்கு ஒரு ஆரம்ப நிலை மாடல் 3 காரின் விலை 38,000 அமெரிக்க டாலர் சிங்கப்பூர் வெள்ளி விலையில் 50,350 என்பது நினைவுகூரத்தக்கது.
மேலும் மேற்குறிப்பிட்ட விலையில் ஆல் வீல் டிரைவ் போன்ற கூடுதல் அம்சங்களும் இல்லை.
ஆர்வமுள்ள வடிக்கையாளர்கள் காரை முன்கூட்டியே ஆர்டர் பெறப்பட்டு, 2021ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம் என்று டெஸ்லா தெரிவித்துள்ளது.