TamilSaaga

தென்கிழக்கு ஆசியாவில் இதுவே முதல்முறை.. ஹாலிவுட் தரத்தில் சிங்கப்பூரில் ஒரு Augmented Reality Studio – சிங்கையை பெருமைப்பட வைத்த OMG நிறுவனம்

சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் ஊடக தொழில்நுட்ப நிறுவனமான Oceanus Media Global (OMG), தற்போது ஸ்டார் வார்ஸ் தொலைக்காட்சி தொடரான ​”​தி மாண்டலோரியனுக்கான” மெய்நிகர் தொகுப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்டுடியோவை சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரின் Ubi சாலையில் $5 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டுடியோவின் சுவர்கள் LED பேனல்களால் மூடப்பட்டிருக்கும். ஆகவே இதன் மூலம் அதன் முன் நிற்பவர்கள் ஆக்மென்டட் ரியாலிட்டி டெக்னாலஜி மூலம் மெய்நிகர் காட்சியின் முன்பு நிற்பது போன்ற தோற்றம் ஏற்படும்.

பயிற்சி வகுப்புகள் நடத்தவும், நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் மேலும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி போன்ற பல தயாரிப்புகளுக்கு இந்த தொழில்நுட்பம் பயன்படும் என்றும் OMG நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டினருக்கு ஒரு “Good News”.. இனி தானியங்கி குடியேற்ற அனுமதியை பெற வாய்ப்பு – ICA வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்

அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டான் பேசுகையில், தென்கிழக்கு ஆசையாவில் நமது சிங்கப்பூருக்கு தான் இந்த பெருமை முதன்முதலில் கிடைத்துள்ளது என்று கூறினார். சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் உணவு நிறுவனமான Oceans Group நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் OMG என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts