TamilSaaga
Family Visa in singapore

Work Permit-ல் இருப்பவர்கள் ஏன் அவர்கள் குடும்பத்தை அழைத்து வர பயப்படுகிறார்கள்? இதையெல்லாம் ரெடி செய்துவிட்டு ப்ளான் பண்ணுங்க

சிங்கப்பூரில் Work Permit வைத்திருப்பவர்கள் சட்டப்படி தங்களின் குடும்பங்களை அழைத்துச் செல்ல முடியாது. அப்படி அழைத்துச் செல்வதாக இருந்தால் tour pass மூலமாக மட்டும் தான் அழைத்துச் செல்ல முடியும். அப்படி அழைத்துச் சென்றாலும் தங்குவதற்கும் அறைகள், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர முடியாது. Work Permit மூலம் பணியாற்றுவர்களுக்கு சம்பளம் மிகவும் குறைவாக தான் இருக்கும்.

வெளிநாட்டினர் சிங்கப்பூரில் வேலை பார்க்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் மாதத்திற்கு 5000 டாலர்களாவது சம்பளம் வாங்க வேண்டும். ஒருவேளை குடும்பத்தினரை அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் அவர்கள் Dependant’s Pass பெற வேண்டும். அப்படி பெற வேண்டும் என்றால் அவர் சட்டப்படி திருமணமானவராக இருக்க வேண்டும். 21 வயதிற்கு கீழ் உள்ள திருமணமாகாத குழந்தையாக இருக்க வேண்டும். தத்தெடுத்த பிள்ளையாக இருந்தாலும் இது விதிமுறைகள் செல்லும். ஒருவேளை குடும்ப உறுப்பினர் Dependant’s Pass பெறுவதற்கு தகுதியானவர் இல்லை என்றால் Long-Term Visit Pass மூலம் சிங்கப்பூர் செல்ல முடியும்.

Long-Term Visit Pass மூலம் சிங்கப்பூர் வரும் குடும்பத்தினர்கள் 2 அல்லது 3 மாதங்கள் மட்டுமே சிங்கப்பூரில் உடன் இருக்க முடியும். ஆனால் அதற்கும் முன் கூட்டியே அவர்களின் செலவுகளுக்கு தேவையான தொகையை சேர்த்து வைத்திருக்க வேண்டும். அதோடு அவர்கள் தங்குவது உள்ளிட்ட மற்ற செலவுகளுக்கான தொகை, அறை உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் இவை அனைத்தும் அவ்வளவு சுலபம் கிடையாது. சிங்கப்பூரில் உள்ள வாடகை வீடுகள், அபார்ட்மெண்ட்கள் போன்றவற்றை முன்கூட்டியே தேடி, ஒப்பந்தம் செய்து கொள்ளவும். விசாவை நீட்டிக்க விண்ணப்பிக்கவும். இதற்கு, நீங்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்கும் காரணம், நிதி நிலைமை, மற்றும் தங்குமிடம் போன்ற விவரங்கள் தேவைப்படும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தகுதியுடையவர்களாக இருந்தால், சிங்கப்பூரில் வேலை தேடலாம். இது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தவும், நீண்ட காலமாக தங்கியிருக்கவும் உதவும்.

Work Permit வைத்திருப்பவர்கள் தங்களின் குடும்பத்தினரை உடன் அழைத்துச் சென்று வைத்துக் கொள்ள எளிமையான சில வழிகள் உள்ளன. அதாவது, புதிதாக திருமணமான தம்பதிகள் தங்களின் மனைவியை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் அவர்கள் சிங்கப்பூரில் ஏதாவது படிப்பிற்கான கோர்சில் சேரலாம். அதுவும் 3 மாதம் அல்லது 6 மாதம் கோர்ஸ் என்றால் அவர்களுக்கு students pass கிடைக்காது.
குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கு அதிகமான படிப்பிற்கான கோர்சில் சேர வேண்டும் என்றால் மட்டுமே students pass கிடைக்கும். அப்படி கிடைத்தால் அவர்கள் படிப்பதற்காகவும், இவர் வேலைக்காகவும் ஒன்றாக தங்கி இருக்க முடியும்.

தொழில் வல்லுநர் விசா (Employment Pass):

உங்கள் வருமானம் மற்றும் பணி அனுபவம் போதுமானதாக இருந்தால், தொழில் வல்லுநர் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விசாவை பெற்றால், உங்கள் மனைவியை குடும்ப உறுப்பினராக அழைத்து வரலாம்.

மற்றபடி Work Permit வைத்திருப்பவர்கள் தங்களின் குடும்பத்தினர்களை உடன் அழைத்து கொண்டு வந்து வைத்துக் கொள்ள முடியாது. சுற்றுலா பயணிகளுக்கான பாஸ் மூலம் அவர்களை அழைத்து வந்து 2 மாதங்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் விசாவிற்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக அவர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான அறை போன்றவற்றை பார்த்து தயார் செய்து வைக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து வைத்து, அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும்.

எல்லா வேலை அனுமதிகளும் ஒரே மாதிரியானவை அல்ல:

சிங்கப்பூரில் பல வகையான வேலை அனுமதிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, S-Pass, Employment Pass போன்ற வேலை அனுமதிகள் பெற்றவர்கள், குறிப்பிட்ட தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், தங்கள் குடும்ப உறுப்பினர்களை சிங்கப்பூருக்கு அழைத்து வர அனுமதிக்கப்படுவார்கள்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts