சிங்கப்பூரில் கடந்த மார்ச் மாதம் 29ம் தேதியன்று மதியம் AMK Hub பகுதியில் நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. AMKவில் False Ceiling என்று கூறப்படும் மேற்க்கூரை இடிந்து விழுந்த சம்பவதில் ஒரு தம்பதி நூலிழையில் தப்பியுள்ளனர். மதர்ஷிப் வாசகர் யூஜின் இதுகுறித்து பேசும்போது “சம்பவம் நடந்தபோது தனது மனைவி சமந்தா சற்று வேகமாக முன்னோக்கி நடந்திருந்தால், அந்த மேற்க்கூரை அவர் மேல் விழுந்திருக்கக்கூடும்” என்று கூறியுள்ளார்.
சம்பவத்தன்று மதியம் 1:50 மணியளவில், தானும் தனது மனைவி சமந்தாவும் AMK ஹப்பின் நான்காவது மாடியில் உள்ள Cathay Cineplex Ticket Kiosk இயந்திரத்தை கடந்து சென்று கொண்டிருந்ததாக யூஜின் மதர்ஷிப்பிடம் கூறினார். நான் அலைபேசியில் பேசிக்கொண்டிருக்க எனது மனைவி எனக்கு சற்று முன்னதாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று ஒரு பலத்த சத்தம் கேட்க நன் திடுக்கிட்டு முன்னோக்கி பார்த்தபோது எனது மனைவி சென்ற பாதையில் சுமார் 3 மீட்டருக்கு முன்னாள் அந்த False Ceiling முற்றிலும் இடிந்து கீழே விழுந்து கிடந்தது. ஜிப்சம் பலகைகள், உலோகம், ஆணிகள் மற்றும் கண்ணாடி துண்டுகள் “இடிந்து விழுந்தன” என்று யூஜின் கூறினார். அதிர்ஷ்டவசமாக, அது இடிந்து விழுவதற்கு முன்பே சமந்தா தனது வேகத்தை குறைத்துக்கொண்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
உடனே அருகில் இருந்த ஒரு SDA அதிகாரி யூஜின் மற்றும் சமந்தா நலமாக இருக்கிறார்களா என்று உறுதிசெய்ய அவர்களை அனுக்கியுள்ளார். SDA அதிகாரி பின்னர் அந்த சம்பவம் குறித்து உரிய அதிகாரிகளிடம் அறிக்கையை சமர்ப்பிக்க, சம்பவத்தின் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். இறுதியாக, யூஜினும் சமந்தாவும் சம்பவ இடத்திலிருந்து சென்றபோது, AMK ஹப் ஊழியர் ஒருவர் அந்தப் பகுதிக்குள் வேறு யாரும் சென்றுவிடாதவண்ணம் Barricade அமைத்தார்.
இந்த சம்பவம் குறித்து யூஜின் மேலும் கூறுகையில், இடிபாடுகள் தரையில் மோதிய தாக்கம் “மிகவும் சத்தமாகவும் பயமாகவும் இருந்தது என்றும்”, ஏனெனில் திரையரங்கம் அந்தத் தளத்தில் அமைந்திருந்ததால் வழக்கமான உச்சவரம்பு உயரத்தை விட உச்சவரம்பு மிக அதிகமாக இருந்தது என்றும் கூறினார். இந்த சூழ்நிலையில் நிச்சயம் பாதுகாப்பு நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிபட கூறினார்.