TamilSaaga

Work Permit-ல் சிங்கப்பூர் வரும் ஊழியர்கள் கவனத்திற்கு.. சிங்கை நிறுவனம் மூலம் Onboard Centre Slots பற்றி கிடைத்த Exclusive பட்டியல் – செய்தியை படித்துவிட்டு Flight டிக்கெட் புக் பண்ணுங்க!

ஜுலை மாதத்துக்கான Onboard Centre Slots இருப்பு பற்றிய Exclusive தகவல் தமிழ் சாகாவுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம், அடுத்த மாதம் சிங்கப்பூர் வரவிருக்கும் புது ஊழியர்கள், முழு விவரத்தை தெரிந்து கொண்ட பிறகு டிக்கெட் புக் செய்யலாம். விமான கட்டணம் வீணாவதையும் தடுக்க முடியும்.

இதற்கு முன்பு சிங்கப்பூரில் வேலைக்கு வர VTL, Entry Approval போன்றவை இருந்தன. ஆனால், கடந்த மே மாதம் 1ம் தேதி முதல் சிங்கையில் Construction, Marine Shipyard மற்றும் Process Sector-ல் வேலைக்கு வர Work Permit-ல் விண்ணப்பித்திருப்பவர்கள் கட்டாயம் Onboard Centre-ல் தங்க வேண்டும் என மனிதவளத்துறை அமைச்சகம் அறிவித்தது.

அதன்படி, இந்த துறைகளில் பணியாற்ற சிங்கப்பூர் வரும் Work Permit Holder-ஸ் Onboard Centre-ல் 3 – 4 நாட்கள் கட்டாயம் தங்க வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு சிங்கப்பூரில் தற்போது நிலவும் தொற்றின் நிலைமை, அவற்றை கையாளும் சூழல், தொற்று குறித்த அரசின் சமீபத்திய நெறிமுறைகள் போன்றவை கற்பிக்கப்படுகிறது.

எனினும், இது முதன் முறையாக Work Permit விசா பெற்று புது IPA (in-principle approval) வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே Work Permit விசா வைத்திருப்பவர்கள், மீண்டும் சிங்கப்பூரில் வேலைக்கு வரும் போது, Onboard Centre செல்ல தேவையில்லை. ஆனால், முதன் முறையாக சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்கள் கட்டாயம் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இது தெரியாமல் பல ஊழியர்கள் விசா வந்த உடனேயே டிக்கெட் போட்டு விடுகின்றனர். இதனால், ஏகப்பட்ட சிக்கல்களும், மன உளைச்சல்களும் தான் மிஞ்சுகிறது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு “New Pass” அறிவிப்பு.. விண்ணப்பித்த உடனே கையில் பாஸ் – இது நல்லா இருக்கே!

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில், S-pass, E-pass-ல் புதிதாக வருபவர்கள் Onboard Centre செல்ல தேவையில்லை. ஆனால், Work Permit-ல் புது IPA-வில் முதன் முறையாக சிங்கப்பூர் செல்ல இருக்கிறீர்கள் என்றால், சிங்கையில் நீங்கள் வேலைக்கு செல்லவிருக்கும் நிறுவனம் நீங்கள் Onboard Centre-ல் தங்க முன்பதிவு செய்ய வேண்டும். இது உறுதி செய்யப்பட்ட பிறகு தான், நீங்கள் விமான டிக்கெட்டையே புக் செய்ய வேண்டும்.

Onboard Centre-ல் தங்க புக்கிங் செய்யவில்லை எனில், நீங்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே வர அனுமதி கிடையாது. ஏனெனில், சிலர் Onboard Centre-க்கு முன்பதிவு செய்யாமல், சிங்கப்பூர் சென்று இறங்கிய பிறகு பார்த்தால், அந்த குறிப்பிட்ட தினத்தில் Onboard Centre-ல் Slot முழுவதும் நிரம்பியிருக்கும். அதாவது, அங்கு ஊழியர்கள் முழுமையான அளவு ஏற்கனவே தங்கியிருப்பார்கள். எனவே, அன்றைய தினம் புதிதாக சென்றவர்களுக்கு அங்கு தங்குவதற்கு இடம் கிடைக்காது. இதனால், சில ஊழியர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, விமான டிக்கெட் புக் செய்வதற்கு முன்பாக, இந்த Onboard Centre-ல் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

இந்நிலையில், ஜுலை மாதத்துக்கான Onboard Centre Slot-களின் விவரம் நமது தமிழ் சாகாவுக்கு கிடைத்துள்ளது. சாதாரண ஊழியர்களால் இந்த விவரங்களை பெற முடியாது. சிங்கையில் உள்ள ஒரு நிறுவனத்தில் மூலம் இத்தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

அதன்படி, ஜூன் 24 பிற்பகல் 3:48 மணி நிலவரப்படி தேதி வாரியாக எவ்வளவு இடங்கள் காலியாக உள்ளன என்பது பட்டியலிடப்பட்டுள்ளது.

அதன்படி,

தேதி (Date)காலியாக உள்ள இடங்கள் (Total No.of Slots)
16 July, 2022105
17 July, 2022277
18 July, 2022230
19 July, 2022243
20 July, 2022287
21 July, 2022259

இந்த slots என்பதன் எத்தனை இடங்கள் இருக்கின்றன என்பதை குறிக்கிறது. அதாவது. ஜுலை 16ம் தேதி 105 slots உள்ளன என்றால், அன்றைய தினம் சிங்கப்பூர் வரும் 105 பேர் Onboard Centre-ல் தங்க இடம் உள்ளது என்று அர்த்தம். அதன்படி, ஜுலை 16 முதல் 21ம் தேதி வரை எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்ற தகவல் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை வைத்தே, புதிதாக சிங்கப்பூர் வரும் ஊழியர்கள் விமான டிக்கெட்டை புக் செய்ய வேண்டும். மீண்டும் சொல்கிறோம். Onboard Centre-ல் தங்க இடம் புக்கிங் செய்யாமல், விமான டிக்கெட்டை போட வேண்டாம். ஏனெனில், நீங்கள் பயணிக்கும் தினத்தில் Onboard Centre-ல் தங்க இடமில்லை எனில் நீங்கள் சாங்கி விமான நிலையத்தை விட்டே வெளியே செல்ல முடியாது.

News Source:

விமான டிக்கெட் சேவைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம், திருச்சி 620 007
97 91 477 360

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts