TamilSaaga

“மனம் மகிழ்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” – சிங்கப்பூர் ACE நிறுவன கொண்டாட்டங்கள் – புகைப்படங்கள் உள்ளே

சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக செயல்பட்டு வரும் ACE குழுமம், பல பங்குதாரர்கள் மற்றும் NGOகளுடன் இணைந்து தேசிய தின கொண்டாட்டங்களில் ஈடுபட்டது. மற்றும் ACE நிறுவனத்தின் 1வது ஆண்டு நிறைவு நாள் விழாவும் கடந்த வார இறுதியில் நடைபெற்றது. இதுகுறித்து மனிதவள அமைச்சகம் வெளியிட்ட முகநூல் பதிவில் “சிங்கப்பூரில் உள்ள கிரான்ஜி பொழுதுபோக்கு மையத்தில், நமது புலம்பெயர்ந்த தொழிலாள நண்பர்கள் பல செயல்பாடுகளில் ஈடுபட்டனர். கேன்வாஸ் ஓவியம் வரைதல் பல செயல்பாடுகளில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் A Good Space, Alliance of Guest Workers Outreach (a movement of Hope Initiative Alliance), Backalleybarbers, HomeforallMigrants, Sama Sama, Tzu Chi Humanistic Youth Centre, Welcome In My Backyard மற்றும் The24asia உள்ளிட்ட நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுவா சு காங் விடுதி Bயில் இருந்த தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்கள் “மலம் மஜூலா”விற்கு வருகை தந்தனர். உள்ளூர் உணவுகள், விளையாட்டுகள் மற்றும் இசையுடன் கூடிய இரவு சந்தைகளில் அவர்கள் பங்கேற்றனர். CMSC எனப்படும் கோவிட் -19 புலம்பெயர்ந்தோர் ஆதரவு கூட்டணி, தங்குமிட சங்கம் சிங்கப்பூர் லிமிடெட் (DASL) மற்றும் சம சமா ஆகிய நிறுவனங்கள் இதற்கு ஏற்பாடு செய்தது குறிபிடத்தக்கது.

ACE குரூப் மற்றும் சிங்கப்பூர் இளைஞர் படையைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் சுமார் 10,000 பராமரிப்புப் பைகள் தயார் செய்யப்பட்டன. பின்னர் அவை AGWO, அதன் ரெயினிங் ரெயின்கோட்ஸ் மற்றும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தீவு முழுவதும் உள்ள 8 RCகளில் (குடியிருப்பாளர்கள் குழுக்கள்) விநியோகிக்கப்பட்டன.

மேலும் NGOகளின் தாராளமான ஆதரவு இல்லாமல் இந்த நடவடிக்கைகள் எதுவுமே சாத்தியமில்லை என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்தது. எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நல்ல சமுதாயத்தை உருவாக்குவதற்கு, தங்களின் தாராள ஆதரவை வழங்கிய எங்கள் பங்காளிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம் என்றும் ACE நிறுவனம் தெரிவித்தது.

Related posts