இதோ… சிங்கப்பூர் பிரதமர் லீ அவர்கள் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பு நிறைவேறும் நேரம் நெருங்கிவிட்டது.
ஆம்! கடந்த மார்ச் 24ம் தேதி, சிங்கப்பூரின் பெருந்தொற்று நிலை குறித்து பேசிய நமது பிரதமர் லீ சில முக்கிய தளர்வுகளை அறிவித்தார்.
அதன்படி, “இனி முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகள், 12 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகள் மார்ச் 31 இரவு 11.59 மணி முதல், சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு முன் அவர்கள் எடுக்கவேண்டிய “Pre Departure Test மட்டும் எடுத்தால் போதும், சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்” என்று அதிரடியாக அறிவித்தார். அதாவது இனி சிங்கப்பூர் நுழைய “Entry Approval” தேவையில்லை என்று அறிவித்தார்.
பிரதமர் லீ-யின் இந்த அறிவிப்பு, வெளிநாட்டு பயணிகள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது. ஏனெனில், Entry Approval கிடைக்காமல், பல வெளிநாட்டு ஊழியர்கள் தடுமாறி வந்த நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு ஊக்கமாக அமைந்தது.
அதேபோல், சிங்கப்பூர் நுழைந்த பிறகு தனிமைப்படுத்துதலும் இல்லை என்று பிரதமர் அறிவித்தார். இதன்மூலம், இந்தியா உள்பட பிற நாட்டு பயணிகள் இனி எந்தவித கவலையும் இல்லாமலும், VTL போன்ற குறிப்பிட்ட விமானங்களை மட்டும் சார்ந்திருக்காமல் சிங்கப்பூர் வர முடியும். இன்னும் சொல்லப்போனால், ICA தளத்தில் “VTL” எனும் பிரிவையே சிங்கப்பூர் அரசு இன்று முதல் நீக்கிவிட்டது.
மேலும் சிங்கப்பூர் வந்திறங்கிய 24 மணி நேரத்திற்குள் ART சோதனையும் எடுக்க வேண்டியதில்லை. தினசரி சிங்கப்பூர் வருபவர்களின் எண்ணிக்கையில் எந்தவித Quotaகளும் இருக்காது என்றும், Entry Approval இனி அவசியமில்லை என்றும் பிரதமர் அறிவித்தார். இந்த புதிய விதி VTL சேவைக்கு மாற்றாக அமையும்.
எவ்வாறாயினும், புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நடத்தப்படும் Pre Departure Test அமலில் இருக்கும் என்றுm சுகாதார அமைச்சகம் (MOH) என்று தெளிவுபடுத்தியுள்ளது. முழுமையாக தடுப்பூசி போடாத நீண்ட கால அனுமதி பெற்றவர்கள் (Long Term Pass Holders) மற்றும் 13 வயது மற்றும் குறுகிய கால பார்வையாளர்கள் (Short Term Pass Holders) சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஆனால் தடுப்பூசிகளுக்கு மருத்துவ ரீதியாக தகுதியற்ற நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள், 13 முதல் 17 வயதுடைய நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் குறுகிய கால பார்வையாளர்கள் மற்ற செல்லுபடியாகும் நுழைவு அனுமதி வைத்திருப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், Singpass இணைய தளத்தில் இருந்து “Entry Approval” ஆப்ஷன் இன்று நீக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்களின் ஐடி-க்காக கொடுக்கப்படும் ‘singpass’ இணையதளத்தில் இவ்வளவு நாட்களாக இடம் பெற்றிருந்த “Entry Approval” ஆப்ஷன் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், பிரதமர் லீ-யின் அறிவிப்பின் படி, முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் நுழைவு அனுமதியின்றி சிங்கப்பூர் அனுமதிக்கப்பட உள்ளார்கள்.